28
அ-2-15 புறங்கூறாமை -19
- 'பின் நோக்கா' என்பதற்கு, மணக்குடவர், 'பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர்முகம் நோக்க ஒண்ணாத' என்று பொருளுரைப்பர்.
- இதனையே, காலிங்கரும், 'பின்பு முகநோக்கத் தகாத சொல்லின்' என்று உடன்படுவர்.
- இவர்தம் கருத்தும் ஒரோ வகையிற் பொருந்துவதாம் எனினும், முகநோக்கா நானவிளைவினும், 'பின்விளையும் தீமையை எண்ணிப் பார்த்தல்' முகாமையானதாம் பற்றி இப் பொருளே முற்றும் பொருந்துவதாம் என்க.
3. இதில், புறங்கூறாமைக்குரிய புறனடை யாகிய கண்நின்று கண்ணறச்சொல்கெனக் கூறப்பெற்றதால் அதனையடுத்து இது வைக்கப்பெற்றது என்க.
கஅரு. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
- 185
பொருள்கோள் முறை : இயல்பு.
பொழிப்புரை : ஒருவன் அறத்தைப் பற்றிப் பெருமையாகக் கூறினும், அவன் உள்ளத்தால் அதைக் கடைப்பிடியாதிருக்கின்ற தன்மை, அவன் பிறரைப் பற்றிப் புறங்கூறுகின்ற புல்லிய செயலால் கண்டுகொள்ளப்படும்.
சில விளக்கக் குறிப்புகள் :
1. அறஞ் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - ஒருவன் அறத்தைப் பற்றிப் பெருமையாகக் கூறினும், அவன் உள்ளத்தால் அதைக் கடைப்பிடியாதிருக்கின்ற தன்மை.
- இதில், ‘அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை' என்பதற்கு, மணக்குடவர், 'ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையவன் அல்லாமை' என்று பொருள் தருகிறார்.
- காலிங்கர், 'ஒருவர் அறநூல் சொல்லுகின்ற தூய நெஞ்சத்தார் அல்லர் என்பதனை' என்றும்,
- பரிமேலழகர், 'புறஞ்சொல்லுவான் ஒருவன் அறனை நன்று என்று சொல்லினும் அது தன்மனத்தானாய்ச் சொல்லுகின்றானல்லன் என்பது' என்றும்,
- பாவாணர், 'புறங்கூறுவானொருவன் அறம் நல்லதென்று சொல்லினும்,