பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

33சில விளக்கக் குறிப்புகள் :

1. துன்னியார் குற்றமும் - தம்மொடு பொருந்திய நண்பர்தம் குற்றத்தையும்.

துன்னுதல் - பொருந்துதல்.

- துன்னியார் - பொருந்தியவர் நண்பர்.

- பொருந்திய நண்பர்.

குற்றமும் - குற்றத்தையும்,

- 'உம்'மை, சிறப்பும்மை,

துன்னியார்க்கு வந்தது.

2. தூற்றும் மரபினார் - வெளியில் போய்ப் பழிதூற்றுகின்ற வழக்கம் உடையவர்.

தூற்றுதல் - பழிதூற்றுதல்

தூற்றல் - ஓரிடத்து விழுமாறின்றிப் பரவலாகப் பலவிடத்தும் படுமாறு செய்தல்.

- மழைத்துாறல் போல் பலரிடத்தும் சிதறச் செய்தல்,

- 'களத்தில் பொலிதுற்றுவது போலப் பலரறியப் பரப்புதல்' என்பார் பாவாணர்.

மரபினார் - வழக்கம் உடையவர்.

மரபு - வழக்கம் ;

- ஒருவர்பால் நிகழ்வது பழக்கம்.

- அதேபோல் பலரிடத்தும் செய்வது வழக்கம்.

- பழக்கம் மிகுந்து வழக்கமாய் விடுதல்.

3. ஏதிலார் மாட்டு என்னை கொல் - தமக்குத் தொடர்பற்றவர் தம் நிலையில் என்னபடி நடந்து கொள்வாரோ?

ஏதிலார் மாட்டு - தமக்குத் தொடர்பில்லாத அயலாரிடத்து.

- ஏதிலாரை 'வேண்டாதார்' என்று பரிதியாரும்,

'பகைவர்' என்று காலிங்கரும், பொருள்படுத்துவர்.

- துன்னியார் (பொருந்திய நண்பர்) என்று முன்கருத்தில் கூறியதால், இதில், தொடர்பில்லாத (அயல)வர் என்பதே பொருந்தும் என்க.