பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அ-2-16 பயனில சொல்லாமை 20


'நேர்த்து நிகரல்லர் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்’ - நாலடி: 64

‘கல்எறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்’ - நாலடி: 66

‘வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்’ - நாலடி:80:3-4

‘கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாய்இருந் தற்றே இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று’ - நாலடி: 254

‘கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றையர் ஆவார் பகர்வர்; பனையின் மேல்
வற்றிய ஒலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை ஒலி’ - நாலடி: 256

‘கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதைஓர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்’ - நாலடி: 314

‘சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச் சொல்’ - நாலடி: 346:1-2

'நற்பால கற்றாலும் நாடாது சொல்லுவர்ஆல்;
..............................................................................................
...........................................................மற்று யாரானும்
சொற்சோர்வு இலாதாரோ இல்' - பழமொழி: 94: 1,3,4

‘விண்சேர்ந்த புன்சொல் விளம்பல்' - பழமொழி:15:3

'தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க’ - பழமொழி: 135:1-2

'தம்கண்ணில் கண்டதுவும் எண்ணிச் சொலல்' - பழமொழி:153:4

'சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்’ - நான்மணி:100:3

‘சொல்லால் அறிக ஒருவனை' - நான்மணி:77:1

‘கல்லா ஒருவற்குத் தம்வாயின் சொல்கூற்றம்' - நான்மணி:82:1