பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அ-2-16 பயனில சொல்லாமை 20


முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றிபெறு
வெண்கலத்தின் ஒசை மிகுமே விரிபசும்பொன்
ஒண்கலத்தின் உண்டோ ஒலி’ - நீதிவெண்பா:

'நயனில் வன்சொல்’ - பதிற்று.பத்:2:8

'புல்லிய சொல்லும் பொருளும் போலவும்’ - பரி:15:12

'செய்யாத சொல்லிச் சினவல்’ - கலி:81:27

'இகழ்ந்த சொல்லும் சொல்லி’ - அகம்:306:11

'வெஞ்சொல் சேரிஅம் பெண்டிர்’ - அகம்:115:4

'தேற்றாப் புன்சொல் நோற்று’ - புறம்:202:16

- இனி, நூலாசிரியர் கூறுவன சில இங்குக் கவனிக்கத்தக்கன;

‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்’ - 35

‘சிறுமையுள் நீங்கிய இன்சொல்’ - 98

‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’ - 100

‘ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்’ - 128

‘ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்’ - 139

'புறஞ்சொல்லும் புன்மை’ - 185

‘புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான்’ - 189

‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்' - 196

‘அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாதசொல்’ - 198

‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனில்லாச் சொல்’ - 200

‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்’ - 291

'சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’ - 299

‘தன்சொலால் தான்கண் டனைத்துஇவ் வுலகு’ - 387

'கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற்று அற்று' - 402