பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அ-2-16 பயனில சொல்லாமை 20


உண்மையை ஆசிரியர்,

'செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்’ - 694

'நகைவகைய ராகிய நட்பு’ - 817

'அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்’ - 1074

ஆகிய இடங்களில் தெளிவுறுத்துவார்.

- இனி 'பல்லார்' என்பதற்குப் பரிமேலழகர் 'அறிவுடையார் பலரும்' என்று பொருள் தருவர்.

- இவரையொட்டிப் பாவாணரும் அதனை வழிமொழிவர்.

- மணக்குடவர் 'பலர்' என்று பொதுவானும்,

- பரிதியாரும், காலிங்கரும் 'தனக்கு வேண்டாதார்’ என்றும் உரைப்பர்.

- அறிவுடையார் இத்தகையாரை நெருங்கவும் விடாராகையால் அவர்தம் ‘பயனில் சொல்' கேட்கவும், முனியவும் வாய்ப்பில்லை என்பதால், ‘அறிவுடையார் பலர்' என்றது பொருந்தாது.

- 'தனக்கு வேண்டாதார்' எனலும், கேட்கவே வாய்ப்பில்லாமற் போவதாலும் முனிதலும் இல்லாமற் போனதாலும், பொருந்தாவுரையே.

- இனி மக்கள், கற்றார், கல்லாதார், வணிகர், கலைஞர், கல்வியாளர், பெண்டிர், இளவர், மாணவர், உழைப்பாளர் முதலிய பலதரத்தினராக இருப்பதே உலகியல்.

- அவ்வாறு இருப்பாருள் பெரும்பான்மையரிடம் 'பயனில சொல்லுவார்’தொடர்பு கொள்ளுவதும் இயல்வதும் இயற்கையுமாகும்.

- எனவே, அவர்கள் அவர்தம் வீணான பேச்சைக் கேட்கவும் வாய்ப்புண்டு. அவ்வாறு கேட்ட பின்னர் அவர்கள், அத்தகவிலாதாரை வெறுத்தலும் இயல்பாக நடைபெறுவதே - என்க.

- இனி, அவருள்ளும் சிறுபான்மையர் அன்னாரை விரும்பவும் கூடும்.

- இறுதியில் அவர்தமை வெறுத்தாரும் விரும்பியாரும் சேர்ந்த எல்லாருமே இழிவுகூறிப் பேசுவர் என்பது அடுத்த கருத்தான் விளக்கப்பெறும்.

2) பயனில சொல்லுவான்: சொல்லாலும் பொருளாலும், அவனுக்கும் பிறர்க்கும் பயனில்லாதவற்றைச் சொல்லித் திரிபவன்.

பயனில என்பதற்குப் ‘பயனிலவாகிய சொற்களை’ என்பது குறைபொருளாகும் 'சொல்லாலும் பொருளாலும்' என்பதே