பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

51


அவர்கள் அவற்றால் பெருங்கேடுகளை அடையாதவையாகவும் இருக்கலாம்.

- ஞாயம் இல்லாதவையுள் சில :

1) நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பித் தராமல் மறந்து விடுவது அல்லது ஏமாற்றிவிடுவது.

2) நண்பர்களுக்காகச் சிறுவிலையில் வாங்கிய பொருள்களைப் பெருவிலை சொல்லிப் பெறுவது.

3) அவர்கள் பொருளுதவியோ வேறு உதவிகளோ கோரும் பொழுது, தன்னால் செய்யமுடிந்தும் முடியாது என்று பொய்கூறி மறுத்து விடுவது.

4) அவர்களைக் கேளாமலே அவர்தம் பெயரையும் சாய்காலையும் பயன்படுத்தித் தமக்கு நன்மை தேடிக்கொள்வது.

‘கெழுதகையான் கேளாது நட்டார் செயின்' - (804)

5)பெருங்கிழமை (உரிமை)யால், நண்பர்கள் மனம் நோகும்படி செய்வது.

‘பெருங்கிழமை என்றுனர்க

நோதக்க நட்டார் செயின்' - (805)

6)நண்பர்களுக்கு இழப்பையும் அழிவையும் தரும்படி செய்வது

‘அழிவந்த செய்யினும் அன்பறார்’ - (807)

போன்றவை என்க. இவை ஞாயமில்லாமற் செய்யும் செயல்கள்.

-ஆனால், இவற்றால் நண்பர்கள் பெறும் கேடுகளும் மனத்துயரும் அவர்களுக்கு மட்டுமே நிகழக் கூடியவை. மேலும் அவற்றைக் கெழுதகையால் பொறுத்துக் கொள்ளவும் செய்யலாம். (பார்க்க : 'நட்பியல்' , 'பழைமை' அதிகாரம்) .

ஆனால், பயனில பல்லார்முன் சொல்லல் எவ்வாறான தீமை என்பதையும் பார்த்தல் வேண்டும்.

1) பயனில்லாதவற்றைச் சொல்லும் உணர்வுள்ளவன் நடுவு நிலையில்லாத உணர்வினாய், பிறர்பொருளைப் பார்த்துப் பொறாமை கொண்டவனாய், அவர் பொருளைக் கவரவும் எண்ணுபவனாய் இருக்கிறான்.

'பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்’ - (163)

‘பொருள்வெஃகிப் பொல்லாத சூழக்கெடும்’ - (176)

- எனவே புறஞ்சொல்லும் புன்மை அவனிடம் இயல்பாகவே