பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அ-2-16 பயனில சொல்லாமை 20


- பாராட்டுதல் - என்பதற்கு மணக்குடவர், 'கொண்டாடுதல்' என்றும், - பரிமேலழகர் : 'பலகாலும் சொல்லுதல்' என்றும், பாவாணர், ‘பலகாலும் விரும்பிச் சொல்லுதல்’ என்றும் பொருள் தருவர். அவையும் பொருந்துவன எனினும், கூறுதலும் கேட்டலும் ஆகிய இருநிலையும் அதில் உளவாதல் பற்றியும், இரண்டு செயல்களும் போற்றுதல் அடிப்படையிலேயே நிகழ்வன பற்றியும் இரண்டு நிலைகளையும் இணைத்துக் கூறியதாகவே கருதுதல் வேண்டும் கேட்கப் பெறாது அது சொல்லப் பெறாது ஆகலான்.

மகன் எனல் : மாந்தப் பிறவி என்று கூற வேண்டாம். - இங்கு 'அல்' ஈறு எதிர்மறைப் பொருளில் வந்தது.

- மகன் - மக்களில் ஒருவன் - இஃது இருவரையும் குறிக்கும்.

2) மக்கள் பதடி எனல் : மக்கள் பதர் என்று கூறுக. பதடி - பதர், உள்ளீடற்ற நெல்.

- சொல்வதில் பொருள் உள்ளீடு இன்மையால், நெல்லில் உள்ளீடற்ற பதரை உவமை கூறினார்.

- சொல்லில் பொருளில்லாதது போல், மக்கட்குப் பொதுவாக இருக்க வேண்டிய பொது அறிவு இல்லாமையால் மக்கட் பதடியாயினர்.

- மக்கட் பதராகிய அவர்களை அவர் இவர், அவன் இவன், அவள் இவள் என்னாது அது இது என்று அஃறிணைச் சுட்டால் அழைத்தல் போன்றது.

- இங்கு 'அல்' ஈறு உடன்பாட்டுப் பொருளில் வந்தது.

3) சீர்மையும் சிறப்பும் நீங்கும் என்று முன்னைக்குறளில் கூறியவர், இதில் அவை நீங்கிய நிலையில் அவரை அஃறிணையினும் ஓராறி வுயிராகக் கூறியதால், அதன்பின் இஃது இடங்கொண்டது.

க௬௭. நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. - 197

பொருள்கோள் முறை: .

சான்றோர் நயனில சொல்லினும் சொல்லுக
பயனில சொல்லாமை நன்று.

பொழிப்புரை' : அறிஞர் பிறர்க்கு விருப்பமிலாதவற்றை ஒருகால் சொல்லினும் சொல்லுக. (அது தீது பயவாது) ஆனால், பயனில்லாதவற்றைச்