பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

67- சொல்லற்க - என்றது கட்டளை போலும் சொல்.

- சான்றோர்க்கு முகாமையாதலின் கட்டளையாகச் சொன்னார். என்னை?

- 'சொல்லப் பயன்படுவோர் சான்றோர்' - 1078

என்றாராகலின்

3) பயனில்லாத சொற்கள் - எடுத்துக்காட்டுகள் :

(எ-டு) 1) காலையில் திடுமென விழித்து படுக்கையை விட்டு எழுந்து, சோம்பல் முறித்துக் கை கால்களை உதறிக்கொண்டு, படுத்த பாயையும் தலையணையையும் சுருட்டிவைத்து, வீட்டின் மூலையில் கொண்டுபோய் கிடத்திவிட்டு, நேரே கிணற்றடிக்குப்போய் கை, கால், முகங்களைக் கழுவிக் கொண்டு, கழிப்பறைக்குப்போய்க் காலைக் கடன்களையெல்லாம் முடித்துக் கொண்டு, மீண்டும் கிணற்றடிக்குப் போய்க் குளிர்ந்த நீரைப் பத்துப்பதினைந்து வாளிகளைத் தலையில் ஊற்றிக் கொண்டு, நீர்ச்சீலையையும் கட்டியிருந்த வேட்டி, உடலொட்டி (பனியன்), கவட்டி(ஜட்டி), லங்கோடுகளைக் கசக்கிப் பிழிந்து கொடியில் காயவைத்துவிட்டு, தலைவாரிச் சீவி உடையுடுத்துக் கொண்டு, என் மனைவி தட்டில் போட்ட ஐந்தாறு பூப்போன்ற இட்டலிகளையும் சட்டுணியையும், சுடச்சுடப் புட்டுப்புட்டு வாயிலே போட்டு விழுங்கிவிட்டு, நல்ல கொழகொழ வெனத் திண்மமாய்க் கொடுத்த குளம்பியையும் சுடச்சுட ஊதி ஊதி வயிற்றிலே ஊற்றிக்கொண்டு, குடையை ஒரு கையிலேயும் பையை இன்னொரு கையிலேயும் தூக்கிக்கொண்டு, பரபரப்பாக, நடைக்குவந்து காலிலே இரண்டு செருப்புகளையும் மாட்டிக்கொண்டு, எங்கள் வீட்டிற்கும் நகரவுந்து நிறுத்தத்திற்கும் இடையிலே கிடக்கும் ஐந்தாறு தெருக்களில் ஒரமாகப் பரக்கப் பரக்க ஓடோடி நடந்து வந்து, நகரவுந்து நிறுத்தத்திலே வண்டிக்குக் காத்திருந்து உடனே வருகிறதா கலியன் (சனியன்) . ஒரு மணிநேரம் கழித்து வந்த 9 மணி உந்தைப் பிடித்து, மல்லுக்கட்டி ஏறிக்கூரைக் கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, வேகமாகவா ஒட்டுகிறான் - நின்று, நின்று, அசக்கி, அசக்கி மெதுவாய் எருமைக் கணக்காய் ஒட்டிவந்து, எங்கள், அலுவலகத்துக்கு இரண்டு தெரு தள்ளினாற்போல நிறுத்தம் - அதிலே கொண்டு வந்து சாய்க்க, முண்டியடித்து எல்லாரையும் தள்ளிக் கொண்டு, முந்தி வந்தது படக்கெனக் குதித்து இறங்கி, அரக்கப் பரக்க, கடைத்தெருவிலே வந்த திருவிழாக் கூட்டம்போல விடுவிடென்று போகிறவர்களையும் வருகிறவர்களையும் ஊடுருவிக் கொண்டு ஓடிவந்து அலுவலகத்திலே, நாற்காலியிலே வெயர்த்து விறுவிறுத்துப் பொத்தென்று விழுவதற்குள், அப்பாடா, என்று போய்விட்டது. அங்கிருந்த கடிகாரத்தைப் பார்த்தால்