பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அ-2-16 பயனில சொல்லாமை 20


மணி பத்துப்பத்து ஆகியது. ஐயா அதற்குள் போதும் போது மென்று ஆகிவிட்டதே. நான் இதற்குமேல் என்ன செய்வேன்? எப்படி வருவேன்?

- என்று அலுவலர் ஒருவர், அதிகாரியிடம், ஏன் ஐயா பத்து நிமையம், காலத்தாழ்த்தம் ஆகிவிட்டது? என்று கேட்டதற்குத் தந்த விடையிது.

- இதனைக் கீழ்வருமாறு பயனுடைய சொற்களால் சொல்வது, சிறந்தது என்க.

“ஐயா, காலை ஒன்பது மணி நகரவுந்தைப் பிடித்துத்தான் வருகிறேன். வண்டி மெதுவாய் வந்தது; கூட்டமும் மிகுதி அலுவலகம் வருவதற்குள் பத்து நிமையம் கடந்து விட்டது. என்ன செய்வது ஐயா?”

- முன் பத்தியில் உள்ளன பயனில்லாத சொற்கள். பின் பத்தியில் உள்ளன பயனுடைய சொற்கள்.

(எ-டு)

(2) பொய்யும் புளுகும்: ‘எப்படி ஐயா உங்கள் கடனைக் கொடுப்பது? நானும் நாணயாகத் திருப்பிக் கொடுக்கலாமென்றுதான் வாங்கினேன்.'

சென்ற மாதமோ, செலவான செலவு, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இழவு - இடமா கிடைக்குது - எத்தனைப் பேருக்கு வெள்ளையப்பனைத் தள்ளவேண்டியிருக்கிறது தெரியுங்களா?

பெண்டாட்டி தங்கைக்குத் திருமணம் வேறு. எல்லாரும் போக வேண்டியதாகப் போய்விட்டது.

என்னமோ, கருமம், போன இடத்தில் அவளுக்கு வேறு கருக்கலைந்து போய் விட்டது. அதற்குவேறு பாழாய்ப்போன மருத்துவர், மருந்துச் செலவுகள்.

தலையெழுத்து யாரை விட்டது? ஊருக்குப் போய்வந்து பார்த்தா, வீட்டுப் பூட்டை உடைத்து, நாங்களில்லாத வேளையில் எவனோ, ஆயிரம் உருவாப் பொருள்களை அள்ளிக் கொண்டு போயிருக்கிறான்.

அதற்குவேறு, காவல் கீவல் என்று அலைந்தேன். அவர்களுக்கும் 'இலஞ்சம் கிஞ்சம்’ என்று அழுதேன். மானங்கெட்ட அதிகாரிகள் கொடுத்தால்தான் செயல்படுகிறான்கள், என்ன செய்வது உங்கள் கடனைச் சாவதற்குள் கட்டாயம் கொடுத்து விட்டுத்தான் கண்களை முடுவேன். அப்படி நான் கொடுக்கவில்லை என்றால், என் மகன் இருக்கிறான். இதற்குப் போய் முகத்தை முறிக்கிறாற் போல நறுக்கென்று நாலு கேட்டுவிட்டீங்களே! பொறுத்துக் கொள்ளுங்கள், ஐயா!.