பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

69



- இதனைப் பயனுடைய சொற்களால், கீழ்வருமாறு கூறலாம் என்க.

'ஐயா, பொறுத்துக் கொள்ளுங்கள்' சென்ற மாதம் செலவு அதிகம். திருமணம், மருத்துவச் செலவுகள் என்று பலவற்றை ஈடுகட்ட வேண்டியதாகப் போய்விட்டது. பிள்ளைகளுக்கு வேறு பள்ளிக்கூடச் செலவு. திருட்டு வேறு நடந்துவிட்டது. அடுத்த மாதம் கட்டாயம் உங்கள் கடனைத் திருப்பிவிடுவேன்!

(எ-டு)

3) (கொச்சையும் இழிவும்) : 'அண்ணே, இங்க வாங்கண்ணே'. உங்ககிட்டே ஒருசேதி சொல்லனும் அன்னிக்கு, அதான் போன மாசம் தஞ்சாவூரு போயிருந்தேன்.

படு எழவாப் போச்சு, போன வேலையெ முடிச்சுக்கிட்டு வண்டிக்கு வந்தேன். சாயந்தரம் ஆறு மணிக்கு மேலேதான் மெட்றாசுக்கு வண்டிண்ணுட்டான். என்ன பன்றது கண்றாவி.

சரின்னு, நேரம் போகனுமே, பக்கத்திலே இருந்த 'சினிமா' கொட்டாயிலே பகலாட்டம் பூந்துட்டேன். கூட்டம் இளவட்டங்களா நெறஞ்சு கெடந்தது. என்னமோ மலையாளப் படமா? அதெ ஏங் கேங்கறிங்க பச்சைன்னா அப்பிடிப் பச்செ எப்பிடித்தான் எடுக்கிறாங்களோ? எப்படித்தாங் காட்றாங்களோ? போங்க.

வூட்லே பொண்டாட்டிக்கிட்ட படுத்துகிறதுலே இருந்து, வெடிய வெடிய, நடக்கிறதெல்லாம் அப்பிடி வெளிச்சம் போட்டுக் காட்டுனானுங்க, அண்ணே!

அதெ யேங் கேக்கிறீங்க! பாத்துட்டு வந்தா ரெண்டு நாளு அதே எழவு நெனப்பு போங்க.

- இதனைப் பயனுடைய சொற்களால் கீழ்வருமாறு கூறலாம் என்க.

'அண்ணே! போன மாதம் தஞ்சாவூர் போய் வந்தேன். உடனே திரும்ப முடியவில்லை. வண்டிவேறு மாலையில்தான் இருந்தது. அப்பொழுதுதான் ஒரு படம் பார்த்துவிட்டு வந்தேன்! மற்றபடி நமக்குப் படம் பார்க்க நேரம் எங்கு இருக்கிறது?'

4) இது, சொற்பொருட்பின் வருநிலையணி கொண்ட செய்யுள்.

5) இஃது, இவ்வதிகார முடிவாகப் பயனில சொல்லாமையும், பயனுடைய சொல்லுவதும் வலியுத்திக் கூறப்பெற்றதால், முன்னதற்பின்னும் இறுதியிலும் வைக்கப்பெற்றது.