பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அ-2-17 தீவினையச்சம் -21





அ-2 இல்லறவியல்
அ-2-17 தீவினையச்சம் -21
அதிகார முன்னுரை

'தீவினையச்சம்’ என்பது, தீ வினை அச்சம் என்னும் முச்சொற்களின் கூட்டுச் சொல்.

தீப்போலும் வினை தீவினையாயிற்று.

'தீ' - காய்வு, எரிவு, அழிவுக்குக் காரணமான பொருள்.

எனவே, காய்தல் (காய்ச்சுதல்), எரித்தல், அழித்தல் எனும் மூன்று செயற்கும் காரணமான தீயை, அவைபோலும் செயல்களுக்கு முன்வைத்துத் தீயவை என்று குறித்தனர்.

'தீ' - பொருளை அழிக்கும்.

'தீயவை' - உயிர்களை அழிக்கும்

இதனடிப்படையில்,

உயிரழிவு செய்யும் அனைத்து எண்ணங்களும், செயல்களும் தீயவை ஆயின.

இதற்கு மாறாக,

உயிர்மலர்ச்சி செய்யும் அனைத்து எண்ணங்களும், செயல்களும் நல்வினைகள் ஆயின.