பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

71


எனவே, தீவினையச்சம் என்பது

- தீயவினைக்கு அஞ்சுதல்,

- தீயவற்றுக்கு அஞ்சுதல்,

- தீயவை செய்ய அஞ்சுதல்,

- தீய செயற்கு அச்சம் கொள்ளுதல்

எனப் பொருள்கள் தருவதாயிற்று.

அச்சம் - அஞ்சுதல் - அஞ்சி அடங்குதல்.

அம் + சு = அஞ்சு .‘சு' ஒரு சொல்லீறு.

பிஞ்சு, குஞ்சு, பஞ்சு, மஞ்சு என்றார்ப் போல.

அம் - அம - அமர் - அமர்வு - அமர்தல் - அடங்குதல்.

அம் - அம - அமை - அமைவு - அமைதல் - அடங்குதல்

அமை - அமைதி.

அம் - அம - அமு - அமுங்கு - அமுங்குதல் - அடங்குதல் - அமுக்குதல் - அடக்குதல்.

அமர்வு - அமைவு - அமுங்கு என்னும் செயல் முடிவுபோல் அஞ்சு, அஞ்சுதல் என்னும் வினைகளும், அடங்கி ஒடுங்குதல் என்னும் பொருள்களைக் குறித்தன.

எனவே, ,தீவினையச்சம், என்பது, பிறரின் உயிரழிவுக்குக் காரணமான தீயவினைகள் செய்ய அஞ்சி அடங்குதல் - அச்சம் கொள்ளுதல் - என்னும் பொருளதாயிற்று.

'தீயவை' என்பது, தீச்சொல் (28), தீயொழுக்கம் (138 தீவினை (201, 210), தீயவை (202, 208, தீப்பால (20), தீப்பிணி (22) - முதலிய அனைத்தையும் அவ்வவ்விடத்துக் குறிக்கும்.

இது தொடர்பான இலக்கியப் பயன்படுத்தங்களும், கருத்துகளும் கீழே தரப்பெறுகின்றன. -

‘தீவினை அகற்று’ - ஆத்திசூடி : 58

‘தீவினையும் அஞ்சலராய்’ - தீவினை - பழமொழி 27 : 1

'அஞ்சிலென்? அஞ்சா விடிலென்? குருட்டுக்கண்
துஞ்சிலென்? துஞ்சாக்கால் என்?' - பழமொழி: 238:3-4

‘தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீயதே - தீயார்,
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.’ - வாக்குண்டாம் : 9