பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அ-2-17 தீவினையச்சம் -21


 'தீய செயல்செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறல்ல - தீயன
நல்ல ஆ காவாம் ; நாவின் புறநக்கிக்
கொல்லும் கவயஆமாப் போல்’ - நீதிநெறி: 74

‘கொலையஞ்சார் பொய்நாணார் மானமும் ஒவ்வார்
களவுஒன்றோ ஏனையுவும் செய்வார் - பழியோடு
பாவமிஃ தென்னார் பிறிது மற் றென்செய்வார்
காமம் கதுவப்பட்டார்'. - நீதிநெறி: 78

‘எல்லா விடத்தும் கொலைதீது ; மக்களைக்
கல்லா வளரவிடல் தீது - நல்லாள்;
நலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது
கொள்கை அழிந்தக் கடை' - நான்மணி : 95

'தீதில் வினையினான் நந்துவர் மக்களும்’ -நான்மணி 47:3

‘அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும்’ - நான்மணி 45 : 3

‘மனமாண்(பு) இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தானினிது நன்கு’ - இனி. நா. 10:3-4

‘பாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில்மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது' - இனி.நா.23:3-4

‘இன்னா பெரியார்க்குத் தீய செயல்’ - இன்னா. 27:4

'தீமை உடையார் அயலிருத்தல் நன்கு இன்னா’ - இன்னா 24:2

‘பிறர்க்கின்னா செய்தலின் பேதைமை இல்லை’ - அறநெறி 96 : 1

'பழியஞ்சான் வாழும் பசுவும் '- (ஆன்மா) - திரிகடு : 79 : 1

‘கொல்வது தான்அஞ்சான்’ - திரிகடு 87 : 1

‘தீயன செய்யான் சிறியார் இனஞ்சேரான்' - ஏலாதி:14:2

'தீமை உடையார்
‘வருந்தினார் என்றே வயப்படுவது உண்டோ?' - பழமொழி:9:1-2

‘அஞ்சாமை அஞ்சுக ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை எஞ்சும் அளவெல்லாம்’ - பழமொழி 25: 1-2

‘தீயன ஆவதே போன்று கெடும்’ - பழமொழி 173 : 3

'தாம் திய செய்த மலைமறைத்தது) என்றெண்ணித்
தாம்தியார் தம்தீமை தேற்றாரால் - ஆம்பல்