74
அ-2-17 தீவினையச்சம் -21
‘அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ’ - நற்: 76 : 4
‘கொலை அஞ்சா வினைவலரால்’ - கலி: 10 : 6
‘அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன்’ - கலி : 42 : 26
‘பொய்ச்சூள் அஞ்சவும்’ - கலி : 75 : 27
‘தவறு அஞ்சி’ - கலி : 88 : 19
‘தன்சிதைவு அறிதல் அஞ்சி’ - அகம் : 7 : 9
‘பலர் அறிவுறுதல் அஞ்சி’ - அகம் : 142 : 15
‘பிறர் அஞ்சுவது அஞ்சி’ - புறம் : 182 : 4
இனி ஆசிரியர் தீயவற்றுக்கு அஞ்சுதலை வேறு சில இடங்களிலும் குறித்திருப்பதையும் ஒர்க
'பழியஞ்சி’ - 44
‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்’
- 428
‘கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான்’ - 325
இனி தீயவை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும்;
நல்லவை செய்தற்குத் துணிதல் வேண்டும்
- என்னும் ஒரு குறிப்பும் ஆசிரியரால் தரப்பெறுதல் சிந்திக்கத் தக்கது.
'துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை’
- 669
‘தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு’
- 688
இனி இந் நூலாசிரியப் பெருமானாகிய மெய்யறிவுப் பேராசான், ‘இல்லறவியலில் தாம் வகுத்தெடுத்துக் கொண்ட அறவியல் கூறுகள் ஒரு முறைப்படி அமைக்கப்பெற்ற சிறப்பு வாய்ந்தன என்பதை இவ்விடத்து நினைவு கூர்தல் சாலவும் பொருந்தும்' என்க.
- அவர் இல்லறத்தின் அகஅகவியல் (Inner - internal) கூறுகளாக, முதல்நிலையில், இல்வாழ்க்கை, வாழ்க்கைத்துணை நலம், மக்கட்பேறு - ஆகிய மூன்று அறவியல் கூறுகளின் உண்மைகளைப் புலப்படுத்தினார். இவை கணவற்கும் மனைவிக்கும் மட்டுமே தெரியவேண்டிய உள்ளடக்கம் பற்றியவை.
- அடுத்து அவ்வில்லறத்தின் அகவியல்(Internal) கூறுகளாக, இரண்டாம் நிலையில், அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல்,