பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அ-2-17 தீவினையச்சம் -21


 - சிறந்ததைத் 'தலை' என்று கூறுதல் நூலாசிரியர் வழக்கு.

'ஐம்புலத்தாறு ஒம்பல்தலை’ - 43

‘முயல்வாருள் எல்லாம் தலை’ - 47

'நிறைகாக்கும் காப்பே தலை’ - 57

'இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ - 151

‘தானஞ்செய் வாரின் தலை’ - 295

‘மானாசெய் யாமை தலை’ - 317

‘தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ - 322

‘கொல்லாமை சூழ்வான் தலை' - 325

‘செல்வத்துள் எல்லாம் தலை’ - 411

‘வன்மையுள் எல்லாம் தலை’ - 444

'பொறுத்தாற்றும் பண்பே தலை’ - 579

‘கழிதல் குரவே தலை’ - 657

‘எண்ணி உரைப்பான் தலை’ - 687

'நாடென்ப நாட்டின் தலை' - 736

'வெறுக்கையுள் எல்லாம் தலை’ - 761

'தமரின் தனிமை தலை’ - 814

'இன்னா செய்யாமை தலை' - 852

'போற்றலுள் எல்லாம் தலை’ - 891

'உழந்தும் உழவே தலை' - 1031

3. அறிவுள்ளவர்கள் தம்மைப் பகைப்பவர்களுக்கும் கூட தீயவற்றைச் செய்யமாட்டார்கள் என்றார்.


உ0௪. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு - 204

பொருள்கோள் முறை:

மறந்தும் பிறன்கேடு சூழற்க. சூழின்
குழ்ந்தவன் கேடு அறம் குழும்

பொழிப்புரை: மறந்தும்கூட ஒருவன் பிறனுக்குக் கேடுகள் செய்ய எண்ணிப் பார்க்க வேண்டாம். அவ்வாறு எண்ணினால், எண்ணுகிறவனுக்குத்