பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அ-2-17 தீவினையச்சம் -21


 ‘கூற்றுடன்று மேல் வரினும்’ - (765)

‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்’ - (894)

'பண்டறியேன் கூற்றுஎன்பதனை' - (1083)

‘கூற்றமோ, கண்ணோ’ - (1085)

'காமத்'தை ஒரு தெய்வமாக உருவகித்துள்ளமை:

'கானான் கொல் காமன்’ - (1197)

அச்சப்படுதலைப் பேயாக உருவகித்துள்ளமை:

'பேய் கண் டன்னது உடைத்து' - (565)

'வெறுப்புணர்வை' ஒருவகைப் பேய் (அலகை)ஆக உருவகித்துள்ளமை:

‘வையத்து அலகையா வைக்கப் படும்’ - (850)

பொறாமையை ஒரு பாவியாக உருவகித்துள்ளமை

‘அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்’ . - (168)

2) மறந்தும் பிறன்கேடு சூழற்க : மறந்துகட, ஒருவன் பிறனுக்குக் கேடுகள் செய்ய எண்ணிப்பார்க்க வேண்டாம்.

மறந்தும் : மறந்துங்கூட.

- அஃதாவது, அதனால் தனக்கும் பிறர்க்கும் வரும் தீமைகளை நினைந்து பாராமல் மறந்தும்கூட,

'மறந்தும்கூட ஒரு கேட்டையோ பழிவரும் செயலையோ செய்ய வேண்டாம் அல்லது மறக்க வேண்டாம் என்று எச்சரித்துக் கூறுவதும்,

- ஒன்றை ஒரு தீமையைச் செய்யாமல் மறந்துவிடுதல் நன்று அல்லது மறந்துவிடுதல் வேண்டும் என்று உறுதிப் படுத்திக் கூறுவதும், ஆசிரியர் வழக்கு, என்க.

மறந்தும் ஒன்றைச் செய்யவேண்டாம் அல்லது மறக்கவேண்டாம் என்பது.

'பொருள் தீர்ந்த பொச்சாந்தும் மறந்தும் சொல்லார்' - 199

'மறத்தலின் ஊங்கில்லை கேடு' - 32

‘மறவற்க மாசற்றார் கேண்மை’ - 106

ஒன்றைச் செய்யாமல் மறந்துவிடுக அல்லது மறந்து விடுதல் வேண்டும் என்பது.