பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

83



'நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ - 108

'மறத்தல் அதனினும் நன்று’ - 152

'மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ - 303

'பொச்சாவா (மறவாமை)க் கருவியால் போற்றிக் கொளல்’ - 537

பிறன்கேடு : ஒருவன் பிறனுக்குக் கேடுகள் செய்ய.

சூழற்க : எண்ணிப் பார்க்க வேண்டா,

சூழ்தல் - ஆழ்ந்து எண்ணுதல்

- ஆராய்தல், எண்ணிப் பார்த்தல்.

- பிறனுக்குக் கெடுதல்களை என்னென்ன வகையில், எவ்வெவ்வாறு, எவ்வெக்காலங்களில், எவ்வெவ்விடங்களில் செய்யலாம் என்பன பற்றி ஆழ எண்ணுதல், அதுபற்றி ஆராய்ந்து முடிவு செய்தல்.

சூழ்வு - அறிவாராய்வு.

- அறிவால் ஆராய்ந்து ஒன்றைச் செய்தல் 'சூழ்ச்சி' எனப்படும்.

- பெரும்பாலும் பிறர்க்கு நல்லது செய்வதைவிடத் தீயது செய்வதற்கே மிகுதியும் ஆராயப் படுவதால் சூழ்ச்சி என்னும் சொல், தன் உயர்பொருளில் தாழ்ந்து கெடுதற்பொருளிலேயே மிகுதியும் பயன்படுத்தப் பெற்று வருகிறது, என்க.

- 'நாற்றம்' என்பதும், கூத்தி என்பதும் அவ்வகையில் இழிந்த பொருள்கள் தரும்படி தாழ்ந்த சொற்களாம்,

2) சூழின், சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் :

அவ்வாறு எண்ணினால், எண்ணுகிறவனுக்குத் தண்டனையாக என்ன கேடுகள் செய்யலாம் என்பது பற்றி அறம் எண்ணிப் பார்க்கும்.

சூழ்ந்தவன் கேடு : சூழ்ந்தவனுக்கு உரிய கேடுகளை,

- அஃதாவது, அவ்வாறு சூழ்ந்தவனுக்குத் தண்டனையாகத் தரவேண்டிய கேடுகளை.

- அவனுக்கு என்ன கேடுகள் செய்யலாம் என்பது பற்றி,

அறம் சூழும் : அறம் எண்ணிப் பார்க்கும்.

- தானே நிகழும் நிகழ்வுகளை, உறுதிபற்றி ஒரு தெய்வம் நின்று நிகழ்த்துவதாக உருவகித்துக் கூறப்பெற்றது, என்க.

- உருவகங்களை உண்மை என்று வேதநூலார் மிகைப்படுத்திக் கூறியது.