பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அ-2-17 தீவினையச்சம் -21


தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி.’ - அறநெறிச்சாரம்:174.

‘வரைகொள்ளா, முன்னை ஒருவன் வினைசுடும்' - நான்மணி:52:3

- ‘அறஞ்சூழும்' என்பதற்குப் பரிமேலழகர்

‘அறக்கடவுள்' என்பது மதவியற் பொருளாம்.

- பாவாணரும், அவரையொட்டி ‘அறத்தெய்வமே செய்ய எண்ணும்’ என்று பொருள் கூறி, தப்பாது பழிக்குப் பழிவாங்க, வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்க’ என்று விளக்கமும் கூறுதல், அறிவியலுக்கும், உலகியலுக்கும், அறவியலுக்கும் பொருந்தாக் கூற்றாகும் என்று கூறி விடுக்க

4) தீய செறுவார்க்கும் செய்ய வேண்டா என அறிவுவழி முன்னர்க் கூறியவர், இதில் பொதுமை யறவழிப் பிறன்கேடு சூழற்க என்றதால், அதன் பின்னர் இது வைக்கப் பெற்றது.


உ0௫. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து - 205

பொருள்கோள் முறை:

இலன் என்று தீயவை செய்யற்க; செய்யின்
மற்றும் பெயர்த்து இலனாகும்.

பொழிப்புரை: யான் பொருள் இல்லாதவன் என்று கருதி, அவ் வில்லாமை (வறுமை) நீங்குவதற்காகத் தீயவற்றைச் செய்யவேண்டாம். அவ்வாறு செய்யின், ஏற்கனவே இருப்பதும் நீங்கி மேலும் இல்லாதவனாகவே ஆவான்.

சில விளக்கக் குறிப்புகள் :

1) இலன் என்று தீயவை செய்யற்க : யான்பொருள் இல்லாதவன் என்று கருதி, அவ் வில்லாமை (வறுமை) நீங்குவதற்காகத் தீயவற்றைச் செய்யவேண்டா,

- இலன் என்று : தனக்குப் பிறரைப் போல் இல்லையே என்று கருதி.

- பெரும்பாலான தீமைகள் இல்லாமையால் - வறுமையால் - தாம்