பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

87


ஏற்படுகின்றன என்பது குமுகவிலயலாளர் மதிப்பீடு.

- எனவே, பொருளின்மை கருதி கூடப் பிறர்க்குத் தீமை செய்தல் கூடாது என்று தடுத்தார், என்க.

- பொருளில்லாமல் தீமை செய்வது, அப்பொருளில்லா வறுமையைப் போக்கிக் கொள்ளும் நோக்கத்தால், என்க.

- பொருளில்லாமல் செய்யும் தீமைகள்.

1) பிறர் பொருளைத் திருடுதல்.

2) ஏமாற்றிப் பறித்தல்,

3) அடித்துப் பிடுங்குதல்

4) கொலைசெய்து எடுத்துக் கொள்ளுதல். முதலியன

- உலகின்கண் ஒருவன் தீமை செய்வது பலவகைக் காரணங்களால் நிகழ்கின்றன. நூலாசிரியரே அவற்றைப் பலவிடங்களிலும் பலவகைகளில் விளக்கியுள்ளார். அவற்றை இவ்விடத்து நினைவு கூர்தல் மிகு பயன் தருவதாகும்.

- அவை வருமாறு.

1)நடுவுநிலையின்மையால்:

'நடுவொரீஇ அல்ல செயின்’ - (116)

2)அடக்கமின்மையைால்:

‘அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்’ - (121)

3)மிகு சினத்தினால்:

‘கதம்காத்து கற்றடங்கல் ஆற்றுவான்’ - (130)

‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க’ - (305)

4)ஒழுக்கமின்மையால் :

‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ - (136)

5)எளிது என்பதால் :

‘எளிதென இல்லிறப்பான் - (145)

6)அறவுணர்வின்மையால் :

‘அறன்வரையான் அல்ல செயினும்’ - (150)

7)மிகைச்செருக்கால் :

‘மிகுதியான் மிக்கவை செய்தார்’ - (158)