பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அ-2-17 தீவினையச்சம் -21



8) பிறர்மேல் கொண்டபொறாமையால் :

‘அழுக்காற்றின் அல்லவை செய்வார்' - (164)

9) குறுகிய மனவுணர்வால் :

'அவ்வித்து அழுக்காறுடையான்’ - (167)

10) பிறர்பொருள்மேல் உள்ள ஆசையால் :

'வெஃகி வெறிய செயின்' - (175)

11) ஞாயஉணர்வு இன்மையால் :

'நயனில நட்டார்கண் செய்தல்’ - (192)

12) உள்ளச் செருக்காலும், உடல் திமிராலும் :

‘தீவினை என்னும் செருக்கு’ - (201)

13 வஞ்சனையான மனவுணர்வால் :

‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்’ - (271)

14) பழக்கவுணர்வால் :

‘களவின்கண் கன்றிய காதல்’ - (284)

15) உண்மை உணர்வு இன்மையால் :

'வாய்மை தீமை இலாத சொலல்’ - (291)

16) செல்வச் செருக்கால்:

‘செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை’ - (311)

17) நிலையாமை உணராமையால்:

'நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை’ - (331)

18) தன்னைக் குற்றமில்லாதவனாகக் கருதிக் கொள்வதால்:

‘தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கில்’ - (436)

19) தன்னை அளவுக்குமீறி எண்ணும் தற்பெருமையால்:

‘வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' - (439)

20) நல்ல குடும்பத்தில் பிறவாததால்:

‘குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவான்’ - (794)

21) ஏற்கனவே உள்ள உட்பகையால் :

‘உட்பகை உள்ளதாம் கேடு’ - (889)

22) பெண் ஆசையால்:

“பெண் சேர்ந்தாம் பேதைமை’ - (910)