பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

89



23) குடிப்பழக்கத்தால் :

‘கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்’ - (924)

24) சூதாடும் உணர்வால்:

‘சிறுமை பலசெய்து சீரழிக்கும் குது' - (934)

25) நானவுணர்வு இல்லாமையால்:

'நலம் சுடும் நாணின்மை நின்றக்கடை' - (1039)

26) மனைவிமேல் கொண்ட மிகைவிழைவால் அவளுக்கு அஞ்சும் உணர்வால்:

‘இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்’ - (905)

27) தீய நண்பர்களால்:

'நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்’ - (817)

28) அறிவின்மையால்:

‘அறிவிலார் தாம்தம்மைப் பிழிக்கும் பீழை’ - (842)

29) நற்குணம் இன்மையால்:

‘குணனிலனாய்க் குற்றம் பலவாயின்’ - (868)

30) கயமை(கீழ்மை) உணர்வால்:

‘கயவர்... மேவன செய்தொழுக லான்’ - (1073)

முதலிய வல்லுணர்வுகளுடன், இந்தக் குறள் கருத்தையும் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

31) இல்லாமை (வறுமை) நிலையால்:

'இலன் என்று தீயவை செய்தல்’ - (205)

‘இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்’ - (174)

2) செய்யின் மற்றும் பெயர்த்து இலனாகும் : அவ்வாறு செய்யின், ஏற்கனே இருப்பதும் நீங்கி, மேலும் இல்லாதவனாகவே ஆவான்.

மற்றும் - மீண்டும், மேலும்.

- பரிமேலழகரும் அவரைப்பற்றிப் பாவாணரும், மற்றும் என்பதில் உள்ள ‘உம்'மையைப் பெயர்த்தும் என்று பிரித்துச் சேர்த்து, மற்று என்பதை அசைநிலை என்று கூறுவர். அஃது அசைநிலையன்று.

- 'மற்றும்' என்னும் சொல்லை, ஆசிரியர், மீண்டும் அல்லது பின்னும்