பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அ-2-17 தீவினையச்சம் -21


அல்லது மேலும் என்னும் பொருள்களிலேயே வேறு இடங்களில் வழங்கியுள்ளமை கருதத்தக்கதாம்.

‘மயலாகும் மற்றும் பெயர்த்து’ - (344)

‘மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்’ - (345)

'நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்’ - (373)

‘ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றும் ஒர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்’ - (588)

பெயர்த்தும் : நீங்கி, விலகி, இல்லாமல் ஆகி.

முன்னர் இருந்ததும் நீங்கி, விலகி.

'புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு' - (1187)

-தான் பொருள் இல்லாதவன் - வறுமையுடையவன் என்று கருதி, அவ்வில்லாமை நீங்குவதற்காகத் தீயவற்றைச் செய்யின், ஏற்கனவே உள்ள சிறு பொருளும் நீங்கி, மீண்டும் அந்த நிலையை விட இன்னும் கீழான வறுமை நிலையை அடைய வேண்டி வரும் என்று எச்சரித்தார், என்க.

- முன் இருந்ததும் இல்லாமற்போதலாவது, தீயவை செய்ததால் வரும் எதிர் விளைவுகளை நேர்கொள்ள அல்லது ஈடுகட்ட, முன்னிருந்த சிறு பொருளையும் இழத்தல் வேண்டி வருமாதலால் என்க.

3 ) இரண்டு 'இலன்'களில் முன்னது, தன்மை ஒருமையிலும், பின்னது, படர்க்கை ஒருமை வினையாலனையும் பெயராகவும் வந்தன.

4 ) முன்னதில் மறந்தும் பிறன்கேடு சூழற்க, என்றவர், இதில் இலன் என்றும் தீயவை செய்யற்க என்று அதே வகையில் அறிவுறுத்தலால், அதன் பின்னையது ஆனதிது.


உ0௬. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். - 206

பொருள்கோள் முறை:

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்,
தீப்பால தான் பிறர்கண் செய்யற்க.