பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அ-2-17 தீவினையச்சம் -21



பொழிப்புரை : எவ்வகையான பகையினைக் கொள்ளப் பெற்றாரும், அதனின்று ஒருவகையான் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், தீய செயல்கள் என்னும் பகை அழியாமல் அவற்றைச் செய்தவரைத் தொடர்ந்து சென்று தாக்கும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) எனைப் பகை உற்றாரும் உய்வர் : எவ்வகையான பகையினைக் கொள்ளப் பெற்றாரும், அதனின்று ஒருவகையான் தப்பித்துக் கொள்ளலாம். எனைப்பகை உற்றாரும் எவ்வகையான பகையினைக் கொள்ளப் பெற்றாரும்.

- பகை - 'பகு’ என்னும் வேரடியாகப் பிறந்த சொல்.

- பகுத்தல் பிரித்தல் - பாகுபாடு செய்தல், ‘எட்பகவுஅன்ன' - (88)

- பிரிந்த பின் வேறுபடல்.

பின், மனம், மொழி, செயல் அனைத்தாலும் வேறுபட்டு இயங்குவது.

- அவ்வுணர்வுகள் வலிவடைந்த பின்னர், ஒன்றையொன்று எதிர்ப்பது.

- எதிர்ப்பு வலிவமைந்தபின் ஒன்றையொன்று அழிக்க முந்துவது; அழிப்பது.

- பகைக்கு முந்து நிலை இகல்.

இகல் - மாறுபடுவது. பகை - வேறுபடுவது. மாறுபட்ட பின்னரே, வேறுபட்டு இயங்கும் நிலை தோன்றும்.

‘மாறு நின்று எதிர்ந்த’ - குறுந்: 297:3

பகை - மூன்று நிலைப்பட்டது. மனப்பகை, உட்பகை, புறப்பகை

- மனப்பகை : தன் மனத்தைத் துய்மையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யாமல், பலவாறான தவறான எண்ணங்களை வளர விடுவார்க்கு, அவ்வெண்ணங்களே அகப்பகையாக வளர்ந்து விடுதல் இயல்பு என்க.

தீய எண்ணங்கள் தோன்றும் பொழுதே அவற்றை அறிவுணர்வால் வளர விடாது அகற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

‘சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு’ - 422

‘இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து' - 879