பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

அ-2-17 தீவினையச்சம் -21


 ‘கள்ளாமை காக்க தன் நெஞ்சு’ - 287

‘அறிவிலான் நெஞ்சம்’ - 842

‘மருள் நெஞ்சம்’ - 352

‘ஈயாது இவறும் மருள்’ - 1002

‘கரப்பிலா நெஞ்சம்’ - 1053

‘காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்’ - 866

‘தன்நெஞ்சம் தானறி குற்றப் படின்' - 272

‘உள்ளத்தால் பொய்யா தொழுகின்’ - 294

‘மனத்தொடு வாய்மை மொழியின்' - 295

'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற’ - 304

‘நெஞ்சத்து ஒளித்தல்’ - 928

‘வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம்’ - 271

-ஈங்கு எடுத்துக் காட்டிய ஆசிரியர் கூறும் மனமாசுகள் ஆவன: அஃதாவது மனப் பகையுணர்வுகள் ஆவன.

- வஞ்சமாக இயங்குவது; குறுகிய உள்ளம்; சினம் கொள்வது; பொறாமை கொள்வது; நடுநிலையில்லாமை; திருட்டு உணர்வு: பெருந்தன்மையின்மை, கள்ள உணர்வு; அறிவால் செப்பப்படுத்தப் பெறாத அலைவுள்ள உள்ளம்; சூதுடைமை; காம உணர்வு, கரவுணர்வு: குற்றவுணர்வு, பொய்யான உள்ளம் மறைத்துப் பேசும் உணர்வு; தீயவை எண்ணும் உள்ளம் முதலியன.

- இவ்வுணர்வுகள் ஒருவன் மனத்தில் தோன்றி, வளர்ந்து, நிலைப்படின், அவை அவனுக்கே அகப்பகையாக நின்று இயங்கும் என்க.

- இவைபற்றிப் பிறரும் பலவகையாகக் கூறியிருப்பனவும் இங்குக் கவனிக்கத் தக்கன, அவற்றுள் சில :

‘தன்னுடன் உறை பகை’ - அகம் 186 : 20

‘பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை’ - கலி : 118 : 18

‘கடவுபு கைத்தாங்கா, நெஞ்சு எனும் தம்மோடு
உடன்வாழ் பகை உடையார்க்கு’ - கலி: 73: 23 - 24

‘பொய்த்துரை என்னும் பகை இருள்’ - திரிகடு:22 : 3

‘பகை, ஒருவன் முன்னம் வித்தாக முளைக்கும்.' - நான்மணி:30:3

'தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை' - திரிகடு : 78:3