பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

97



இனி, இவ்வகையாகப் பகைகொண்டவன், அவற்றினின்று உய்வது தப்புவது எப்படி என்பது பற்றியும் சிந்தித்தல் வேண்டும். அஃதியல்வதோ எனின் இயல்வதே என்க. என்னை?

'நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்’ - நாலடி: 187:3-4

‘பகையறு பயவினை முயறிமன்' - கலி: 17:14

'நெடும்பகை தற்செய்ய தானே கெடும்’ - பழமொழி: 83:4

'பகைகெட வாழ்வதும் பல்பொருளால் பல்லார்
நகைகெட வாழ்வதும் நன்று’ - சிறுபஞ்ச: 14:3-4

‘நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்’ - பழமொழி: 83:3-4

'நட்டாரை ஆக்கிப் பகை தணித்து' - பழமொழி:398:1

‘எதிர்த்த பகையை இளைதுஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது; எதிர்த்து
நனிநிற்பச் செய்தவர் நண்புனலாம் தீர்க்க
தனிமரம் காடு ஆவது இல்' - பழமொழி: 390

‘மறையாது இனிதுஉரைத்தல் மாண்பொருள் ஈதல்
அறையான் அகப்படுத்துக் கோடல் - முறையான்
நடுவணாச் சென்று.அவரை நன்கு எறிதல் அல்லால்
ஒடிஎறியத் தீராப் பகை’ - பழமொழி: 387

- 'பழம் பகை நட்பாதல் இல்' - பழமொழி: 97:4

- என்பார், பிறர். நூலாசிரியரும்.

‘வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு’ - 878

'பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு' - 874

‘பகைநட்பாம் காலம் வரும்’ - 723

‘பகைஎன்னும் பண்பில் அதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று’ - 871

‘பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்' - 450

- எனப் பகை நட்பாதற்கும், அஃது இல்லாமற்போயின், அது