பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


£3 திருக்குறள் வசனம்

தன்று. வாழையடி வாழையாக வளரவல்லது. இல்வாழ்க்கை யில் பகுத்து உண்ணுதல் மட்டும் போகாது. இல்லறத்தார் தன் வாழ்க்கைத் துணைவியரிடத்து அன்பு உடையவராய் இருப்பதோடு பிறர்க்குப் பகுத்துக் கொடுத்தலில் அறப் பண்பு உடையவராயும் கிகழ்தல் வேண்டும். இவ்விரண்டு அருங் குணங்கள் இல்லறத்தாருக்குப் பண்புடைமையும் பயனுடைமையும் ஆகும். இல்லறத்தார் தம் இல்லாளிடத் தில் அன்பு காட்டாதபோது இல்லறம் இனிது கடவாது. ஆகவே அன்புடைமை அவர்களது இல்வாழ்விற்குப் பண்புடைமை ஆயிற்று. இதனுல்தான் அறலுடைமை பயனுடைமை ஆயிற்று.

இங்கனம் கூறப்பட்ட முறைப்படி இல்லறத்தை இனி துற கடத்தினுல் புறத்துறையாகிய வனத்தில் சென்று தவம் புரியவேண்டிய கியதியும் தேவை இல்லை. இவர்கள் ஐம்புலன்களின் சேட்டைகளே ஒடுக்க முயல்பவர் களைவிடத் தலைசிறந்தவர்கள் என்றும் கருதப்படுவர். ஆளுல் இவ்வில்லறத்தார் இவ்வில்லறத்தின் இயல்போடு கூடி வாழ்பவராக இருக்க வேண்டும். இல்லறத்தார் தவம் செய்பவர்களை அத் தவத்தின் வழி ஒழுகுமாறு அவர்கட்கு வேண்டுவன உதவவேண்டும். அப்படி உதவுதலுடன் தாமும் தம் கடமைகளினின்று தவரு திருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்தத் தன்மைகள் இவ்வில்லறத்தா சிடம் காணப்படுமானுல் தவம் செய்வார் நிலையிலும் உயர் குணம் உடையவர் என்று போற்றப்படுவார்.

இன்னேர் அன்ன சிறப்பு இயல்புகள் இல்லற வாழ்வில் நிலைத்து இருத்தலின், அறன் என்று கூறப்படுவது இல் வாழ்க்கையே அன்றி வேறன்று. ஆணுல், துறவறம் ஆகாதோ என்று சிலர் சந்தேகிக்கலாம். அதுவும் சிறந்ததே