பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§§ திருக்குதள் வசனம்

கொண்டு சேர்க்க வல்லது. அடக்கம் இன்பை பாவிகளுக்கு உறைவிடமாகிய இருள் நிறைந்த நாலோகத்தில் கொண்டு போய் சேர்க்க வல்லது. இத்தகை பயன் அடக்கமுடைமை யாலும், அடக்கமின்மையாலும் ஏற்படுதலின், அடக்க முடைமையைத் தலைசிறந்த பொருளாக எண்ணி அதனைச் சிதைய விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இப் பண்பு உயிர்கட்குச் சிறந்த செல்வமாகும். இதைவிடச் சிறந்த செல்வம் வேறு இல்லை என்றும் கூறி விடலாம். அறிவாகத் அலங்குவதும் இவ் வடக்கமான குணமே ஆகும். இந்த உணர்ச்சி குடும்பஸ்தருக்கு வருதல் வேண்டும். இதன் பயன் எல்லோரால் அறியப்பட்டு அடக்கமுடையவனுக்குப் பெருமை தரல்ல்லதாக இருக்கும். தன் கிலையில் வேறுபடாது. கின்று அடக்கமான கொள்கையுடையவனுக இருப்பின், அவனது மாண்பு மலையிலும் மாணப் பெரியதாகும். இத ளுல் இல்லறத்தார் ஐம்பொறிகளால் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவியாமல் இருந்து அவற்றை அடக்குதல் என்பது கருத்தன்று. ஐம்புலன்களால் துய்க்க வேண்டி யதைத் துய்த்த அடக்கமுடையவராக ஒழுக வேண்டும் என்பதே கருத்தாகும்.

அடக்கமுடைமை யார்க்கு இருத்தல் வேண்டும் ? எழை எளியவர்களுக்குத்தான் இருத்தல் வேண்டும் என்று கூடக் கருதலாம். அப்படிக் கருதுதல் தவறு. இக் குணம் எவர்க்கும் அமைதல் சிறப்புடையதாகும். அவர்களிலும் செல்வம் உடையவர் தம் மனம், மொழி, மெய்களால் அடங்கிப் போகல் அவர்கட்கு இயற்கையில் அமைந்த செல்வத்திலும் மேலும் ஒரு செல்வம் அமைந்தது போலா கும். எல்லார்க்கும் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்ட லச் சலரையும் குறிக்கும் என்ருலும் குடிப் பிறப்பு, கல்வி