பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 47

றைச் சொல்லால் கூறிய தீக் குணங்களுள் அழுக்கருமை பும் ஒன்ருகும்.

அழுக்காருகிய பொருமைக் குணம் அமையப் பெரு இருக்கல் ஒழுக்கத்தின் நெறி என்று கொள்ளுதல் வேண் ம்ே. எவரிடத்தும் பொருமைப்படாதிருத்தலே சாலவும் கல்லது. இக்கப் பண்பு எல்லாப் பண்பினும் சிறந்தது எவரிடத்தும் என்று கூறுவதில் பொருள் உள்ளது. அஃதா வது பகைவர் ஆக்கம் கண்டும் பொருமைப்படாதிருத்தலே ஆகும். பிறருடைய ஆக்கம் கண்டு பொருமைப்பட்டால் இம்மைக்குப் பயன் தரும் செல்வமும், மறுமைக்குப் பயன் அளிக்கும் அறமும் ஒரு சேர இழப்பன். இவை இசண்டும் வேண்டா என ஒருவன் விரும்புவாகுயின், வேண்டுமானல் பொருமைப்படலாம். ஆகவே, அறிவுடையவராய் இருப்ப வர், அழுக்காறு கொள்வதால் தமக்குத் துன்பமே வரு தலின், அறன் அல்லாதவற்றை ஒருபோதும் செய்ய மாட்டார். அஃதாவது கல்வி, செல்வம் முதலியன பெற்ற வர்களிடத்துத் தீங்கினைச் செய்யவோ, சொல்லவோ, செய்தலும் செய்யார்.

பொருமைக் குணம் உடையவர்கட்கு வேறு பகைவர் களே வேண்டுவதில்லை. பொருமைக் குணமே அவர்கட்குப் பெரும் ப்கையாக இருந்து கேட்டினே அளிப்பதாகும். அழுக்காற்றிற்கு ஏனைய தீக் குணங்கட்கு இல்லாதவன்மை பும் உண்டு. எனைய தீக் குணங்கள் திக் குணங்களே மேற் கொண்டவர்களே மட்டும் கெடுக்கும். ஆனல் அழுக்கருே ன்னில், தன்னையும் கெடுக்கும்; தன் சுற்றத்தார்களையும் கெடுக்கும். உடுக்க உடை இன்றிச் செய்துவிடும்; உண்ண உணவின்றி ஆக்கிவிடும். இவற்றைவிட வேறு கொடுமையும் செய்ய வேண்டுமோ?