பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 திருக்குறள் வசனம்

கருதவேண்டா. ஒர் உயிரையும் கொல்லாது ஊன் உண் ஆ வாழ்வதே கலைசிறந்த புண்ணியமாகும். யாகத்தைச் செய்வதினுல் வசக்கூடிய பயனை விடப் பெரும் பயன் அடைவர். உயிர் இனங்களும் புலால் உண்ணுதவனக் கை கூப்பிக் கொழுது வணங்கும். ஊன் உண்ணுதவன் மறு: பிறவியில் தேவரினும் சிறந்தவளுய் விளங்குவான் என்க.

3. தவம்

தவம் என்ருல் என்ன ? மனம் தன் போக்கில் போகாமல் தடுத்து நம் வசமாக்குவதே தவமாகும். மனம் தன் டோக்கில் போகாமல் இருக்கச் செய்யவேண்மானுல், விசதங்களையும், உணவைக் குறைத்து உண்ணுதலையும் மேற்கொள்ளுதல் வேண்டும். மேலும் நமக்கு வரும் துன்பங்களையும் பொறுத்தல் வேண்டும். பிற உயிர்களுக்குத் துன்பம் வந்தபோது அத் துன்பத்தினின்று அவைகளைக் காப்பாற்ற வேண்டும்.

தவம் என்றதும், அதற்கு ஒர் உருவத்தைக் கற்பித்து விடுவர் சிலர். காவியுடையும் நீண்ட காடியும் தவத்திற்கு அடையாளமாகக் கூறி விடுவர். அவையல்ல தவத்திற்கு உருவங்கள். உணவு சுருங்குதல் காரணமாக வரும் துன்பங் களேப் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யா திருத்தலுமே தவ வடிவங்களாகும். ஆளுல் இத்தகைய தவ கிலேயினைப் பெறுதல் சிறிது சிரமம்தான். தவமும் முன் பிறவியில் தவம் செய்தவர்கட்கே அமைவதாகும். மற்ற வர்கள் அதனை மேற்கொள்ளுதல் வீணேயாகும். தவத்தை முடித்தற்கு அறிவும் வல்லமையும் தேவை. இவ்விரண்டில் அல்ல பயிற்சி இல்லாதவர் தவத்தை முற்ற முடிய மேற் கொண்டு முடிக்க இயலாது.