பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஞானம்

பொருள்களிடத்தும் வைத்த ஆசையைக் துறக்கலே கண் மைத் துறவாகும். துறந்தால் இவ்வுலகில் பல இன்பங்களைப் பெறலாம். ஆகவே, காலம் உண்டானபோதே பொருள்க விடத்து வைத்த பற்றை ஒழிக்க வேண்டும். இப்படித் துறக் தால் மனம், வாக்கு, காயம் அலேயாமல் கிலத்து கின்று அவை நல்வழியில் செல்லும். ஆகவே, ஐம்புலன்களேயும் அவற்றின் போக்கிலே போகவிட்டுப் பொருள்களிடத்தில் பற்றுதலைக் கொள்ள விடுதல் கூடாது. தாம் படைத்த பொருள்களை எல்லாம் விடுதல் வேண்டும். ஐம்புலன்களை அடக்க வில்லையானல், முத்திவழியாகிய யோக ஞானங்களில் செல்ல இடம் ஏற்படாது. கல்ல துறவிகள் ஒரு பொரு ளிடத்தும் பற்றின்றித் தமக்கென ஒரு பொருளையும் இல்லா திருக்கலே இல் இயல்பாகும். அவ்வாறின்றித் தமக்கு என ஒரு சிறு பொருளே வைத்திருப்பினும், அது மயக்கத்திற்கு எதுவாகும். ஒரு பொருளும் உடைமையாக இருப்பின், பின் வெறுத்து ஒதுக்கப்பட்ட எல்லாப் பொருளும் வந்து சேர்ந்து தவத்துக்கு விரோதமாய் இருந்து மனக் கலக் கத்தை உண்டு பண்ணும். பிறப்பு நீங்க எண்ணுபவர்க்கு உடம்பும் பெரும் பாரமாகும். மேலும், யான் என்னும் அகபபறறையும, எனது என்னும் புறபபறறையும ఢf డ." ஒழிக்கிருகுே அவன் தேவர்களாலும் அடைய முடியாக முத்தி உலகம் புகுவான். இப் பற்று ஒழிக்க வேண்டு மானுல் குரு உபதேசத்தையும் யோக அப்பியாசத்தையும், மேற்கொள்ள வேண்டும். இவ்விருவகைப் பற்றுக்களையும் யார் விட்டிலரோ அவர்களேத் துன்பங்கள் விடாமல் பற்றிக் தொடரும். எனவே தீாத் துறந்தவர்களே முக் தியை அடைவர். மற்றவர்கள் பிறப்பாகிய வலையில் சிக்கிக் கொண்டவரே ஆவர். பற்று அற்ருல்தான் பிறப்பு அறும். அப்போதுகான் கிலேயாமையும் உனா எதுவாகும்.