பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 5

இறைவன் கருணைத் திருவிளையாடலை யார் உணர்வார்கள்? சம்போ மகாதேவா!

இந்திரன்: எம்பெருமான் பணித்தது வீணுகாது என்ற உறுதி எங்களுக்கு உண்டு.

திருவள்ளுவர்: (பாடுகிறார்)

பூவில் அயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி அளந்தோனும் தாம்இருப்ப-நாவில் இழைதக்கி நூல்நெருடும் ஏழை அறிவேனோ?

எம்பெருமானே, மகாதேவா, உன் திருவிளையாட்டுச் சிறப்புத்தான் என்னே! காதிலிருந்து விழுந்த குழையை மெல்லத் திருவடியால் எடுத்து மீட்டும் காதில் பூட்டிக்கொண்ட உன் செயலே, ஊர்த்துவ தாண்டவமாக அமைந்த அற்புதத்தையும், அதனால் காளியன்னை தலைதாழ்ந்த சிறப்பையும் என்னவென்று சொல்வேன்! [மறுபடியும் பாடுகிறார்] பூவில் அயனும் புரந்தரனும் பூவுலகைத் தாவி அளந்தோனும் தாம்இருப்ப-நாவில் இழைநக்கி நூல்நெருடும் ஏழை அறிவேனோ குழைதக்கும் பிஞ்ஞகன்தன் கூத்து. . [தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம்.] தேவர்கள்: ஆ ஆ! என்ன நுட்பமான கலைத்திறமை ! இந்தப் புலவர் பெருமான் இங்கிருந்தபடியே, இதை அறிந்தது, அதைவிட வியப்பு. இவர் வெறும் புலமை உடையவரல்லர், தெய்வப்புலமை படைத்த பெருமான் ! .

1. தனிப் பாட்ல்