பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 திருக்குறள் விளக்கு -

குரல் அ: உலகம் போற்றும் திருக்குறள் என்ற நூலை இயற்றிய திருவள்ளுவரைப்பற்றி இப்படி ஒரு கதை வழங்குகிறது. ஒருவருடைய பெரு மையை உணர்த்த இவ்வாறு கதைகளைப் புனைந்து போற்றுவது இந்த நாட்டு மக்களுக்கு வழக்கமாக இருக்கிறது. ஆயினும் இதனூடே ஓர் உண்மை புதைந்துள்ளது. சிறந்த கவிஞன் பிறர் காணத் தவறிய, காண இயலாத, நுட்பங்களைக் காணும் ஆற்றலுள்ளவன். தேவரும் அறிய இயலாத நுட் பங்களை உணரும் ஆற்றல் பெற்றவர் திருவள்ளுவர் என்ற கருத்தையே இந்தக் கதை எடுத்துக் காட்டு கிறது. அவர் இயற்றியது திருக்குறள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறள் மனித வாழ்க்கை நன்றாகப் பயன்படும் வகையில் அமைவதற்குரிய சிறந்த நீதிகளைச் சொல்கிறது. எல்லாக் காலத்துக்கும் எல்லா நாட் டுக்கும் உரிய கருத்துக்களைக் கவிச்சுவையோடு சொல்வதால் அது நீதிநூலாக இருப்பதோடு சிறந்த இலக்கியமாகவும் நிலவுகிறது. காலத்தினால் மங்காத நூல் இது என்பதை இறையனார் என்னும் புலவர் பாடுகிறார். - -

குரல் ஆ: எந்த இறையனார்? அந்தப் பாடல் எங்கே இருக்கிறது?

1. இவர் இந்த நிகழ்ச்சிமுழுவதும் விமர்சகரைப்போல இருந்து இடையிடையே அறிவிப்பார். - . . . . . . . . . . .

2. இந்தக் குரல் கேள்வி கேட்டு விஷயங்களை விளக்கக் காரணமாக அமையும். • . . .