பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 7

குரல் அ : மதுரையில் எழுந்தருளியிருந்த புலவர் அவர். ஆலவாயில் எழுந்தருளியிருக்கும் இறைவனே என்று சிலர் நம்புவர். அவர் பலரால் நன்கு மதிக் கப் பெற்றவர் என்பதுமட்டும் உண்மை. திருக் குறளைப் பாராட்டி ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய தனி நூல் ஒன்று உண்டு. அதற்குத் திருவள்ளுவ மாலையென்று பெயர். அவர் பாட்டைக் கேட்கலாம்.

(வேறு குரல் பாடுகிறது.)

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்

நின்று அலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-

குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்

மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்."

(மறுமுறை பாடுகிறது.)

குரல் அ: காலத்துக்கு ஏற்றபடி புதிய புதிய பொருள் கள் வாழ்க்கையில் இணைகின்றன. உடை மாறுகிறது; வீடு மாறுகிறது; ஊரே மாறிய தோற்றத் தோடு நிற்கிறது. ஆனால் மனித உள்ளம் எப்போதும் ஒன்றுதான். ஆகையால், மனிதனுடைய உள்ளத்தை - நன்றாகத் தேர்ந்துணர்ந்த திரு வள்ளுவர் மனித வாழ்க்கையின் அடிப்படையான உண்மைகளை அழகுபடச் சொல்லியிருக்கிறார். ஆதலால் திருக்குறள், என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றுகிறது. இந்தக் கருத்தை இந்தக் காலத்தில்


1. திருவள்ளுவமாலை, 3.