பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 திருக்குறள் விளக்கு

மேல்நாட்டுப் பேரறிஞர்களும் சொல்லியிருக்கிருர் கள். மதிப்புக்குரிய டபிள்யூ. ஹெச். ட்ரூ பாதிரியார் என்ன சொல்கிருர் தெரியுமா?

வேறு குரல்: கருத்திலும் சொல்நடையிலும் ஒப்புயர் வற்று விளங்கும் நூல்களில் தலையாயதான திருக் குறள், அந் நாட்டிற்குரிய நூல்களில் ஒரு பகுதியாக இருப்பதாலும், மிகவும் உண்மையான தனிச்சிறப்பு வாய்ந்திருப்பதாலும், நமது கருத்தைக் கவரவல்ல தாக இருக்கிறது திருக்குறள். சிற்சில சமூகப் பிரிவுக்குமட்டும் உரியவனவான கருத்துக்களை

ஒதுக்கி, யாவருக்கும் ஒருங்கே அமைவனவாகிய

உண்மைகளை மட்டுமே தம் நூலில் ஆசிரியர் எடுத்துக் கூறுகிருர்’

குரல் அ: குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பெரியாராகிய ஜி. யூ. போப் அவர்கள் சொல்லுவதையும் கேட்கலாம்.

வேறு குரல்: திருக்குறள் முழுமையானது; திரு

வள்ளுவர் இந்த ஒரு நூலைத்தான் இயற்றினர். காலமென்னும் ஓடையிலே இது தொடர்ந்து நீந்தி, விள்ளாமல் விரியாமல் முழுசாக வந்திருக்கிறது.

உருப்படியாக உள்ள நல்ல பாட பேதம் ஒன்றுகூட

1. Called the first of works from which whether for thought or language there is no appeal, the Cural has a strong claim upon our attention as a part of the literature of the country and as a work of intrinsic excellence. The author passing over what is peculiar to particular classes of society and introducing such ideas only as are common to all, bas avoided the uninteresting details.

—Rev. W. H. Drew.