பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 11

வானாலும் பயனால் புதியவையாக விளங்குகின்றன. அதை இனிப் பார்ப்போம்.

  • குரல் அ: உலகமெல்லாம் போற்றும் மகாத்மாவாகிய காந்தியடிகள் மற்ற எல்லாப் பண்புகளையும்விடச் சிறந்தனவாகச் சத்தியத்தையும் அஹிம்சையையும் எடுத்துச் சொன்னார். அந்த இரண்டையும் கடைப்பிடித்தால் தனிமனிதனானாலும் நாடானாலும் உயர்வை அடையலாம் என்பதை அவர் பல சமயங்களில் பலவகைகளில் வற்புறுத்தி யிருக் கிறார். இதோ அவர் உபதேசத்தைக் கேட்கலாம்.

வேறு குரல் : சத்தியமே கடவுள் என்பதை உணர் வதே பற்றற்றுப் பெறுகிற விடுதலை. அத்தகைய உணர்வு திடீரென்று ஏற்பட்டுவிடாது. நமக்கு உரியதன்று இவ்வுடல். அது இருந்துகொண் டிருக்கும் வரையில் நல்வழிக்கு ஒப்படைக்கப்பட் டிருக்கும் ஒரு கருவியாக அதை நாம் உபயோகப் படுத்த வேண்டும்......அஹிம்சையைக் கடைப்பிடித் தாலன்றிச் சத்தியத்தை நாடுவது என்பதோ அடைவது என்பதோ இயலாது........ அஹிம்சையும் சத்தியமும் ஒன்றுக்கொன்று பலமாகப் பிணைப்புண் டிருப்பவை. அவற்றை வேறாக்குவதோ, பிரிப்பதோ முடியாத காரியம். ஒரு காசின் இரு பக்கங்களை அல்லது முத்திரை இடப்படாத வழுவழுப்பான உலோகத்தால் ஆகிய வட்டத்தைப் போன்றது அது. அதில் முன்பக்கம் இன்னது, பின் பக்கம் இன்னது என்று யாரால் சொல்லமுடியும்? என்றாலும் அஹிம்சையே வழி, சத்தியமே குறிக்