பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 13

முதலில் வேண்டும். அதனோடு இணைந்து பிரி வின்றிப் பொய்யாமை வரவேண்டும். அதாவது, கொல்லாமை இல்லாவிட்டால் பொய்யாமை பயனுறாது. இப்படி நுணுக்கமாகப் பொருளை அமைக்கிறார் திருவள்ளுவர். சின்ன உருவத்தில் பெரிய கருத்துக்களைச் சொன்னவர் அவர். அதனால்தான் பர்ஸிவல் துரை கூறுகிறார்:

வேறு குரல்: அவர் தாம் கூறும் அறிவுரையை ஆற்ற லுடன் சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார், மனித மொழிகளில் இந்தத் திறமையை மிஞ்ச வேறு நூல் இல்லை." -

குரல் அ : மகரிஷி வ. வே. சு. ஐயர், சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் இந்தப் பேராற்றலே மிக அழகாகப் பாராட்டுகிறார்: - -

வேறு குரல்: எந்த மனிதரும் கூறாத மிகமிக ஆழமான கருத்துக்களை இப்புலவர் ஏழு சீர்களே உடைய சிறிய பாட்டில் செறித்து அமைத்திருக்கிறார், இந்தச் சிறிய கருவியை வைத்துக்கொண்டு பெரிய வித்து வான் சங்கீதக் கச்சேரி செய்வதுபோலச் செய்து விடுகிற அழகுதான் என்னே ! ஒளிவிடும் நகைச் சுவை, திட்பமான சொல்லாற்றல், கற்பனை, முரண் பாட்டு நயம், அழகிய வினா, சித்திரம் போன்ற உவமை-இப்படி இந்த உயர்ந்த கலைப் படைப்பில்

1. Nothing certainly in the whole compass of human language can equal the force and terseness of the sententious distitches in which the author conveys the lesson of wisdom he utters.

-Rev. Percival.