பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு H5

குரல் ஆ : பனித்துளியில் பனையைக் கண்ட அதிசயம் என்றது கபிலர் பாட்டு. பரணர் பாட்டு என்ன புதிய உவமையைச் சொல்லப்போகிறது? குரல் அ : திருமாலின் வாமனுவதாரத்தைப் பரணர் உவமை காட்டுகிருர், வாமனராக வந்த பெருமான் தம் இரண்டே அடியால் உலகம் முழுவதையுமே அளந்துவிட்டார் அல்லவா ? அதே மாதிரி வள்ளுவரும் குறளின் இரண்டடியாலே-ஆம் குறள்வெண்பாவுக்கு இரண்டு அடிகளே உண்டுஅந்த இரண்டடிகளாலே வையத்தார் எண்ணுவன எல்லாவற்றையும் தாம் ஒர்ந்து அளந்துவிட்டாராம். அந்தப் பாட்டையே கேட்கலாமே. . வேறு குரல் : (பாடுகிறது.)

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால் ஞாலம் முழுதும் நயந்து அளந்தான்-வாலறிவின் வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவஎல் லாம்.அளந்தார் ஒர்ந்து.'

குரல் ஆ: காலத்தால் மங்காத கருத்தைத் திருவள்ளு வர் சுருங்கிய உருவில் மணிகளைப்போல உருட்டித் திரட்டித் தந்திருக்கிருர் என்பதை இப்போது நன்ருக உணர . முடிகிறது. இன்னும் ஓர் உதாரணம் இருந்தால் அந்தக் கருத்தைத் திண்ண மாகத் தெரிந்துகொள்ளலாம். - . - குரல் அ: முன்னே சொன்னது அறத்துப்பாலில் வரும் பாட்டு. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பெரும் பிரிவாகப் பிரிக்கப்

1. திருவள்ளுவ ம்ால, 6.