பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

திருக்குறள் விளக்கு

பட்டுள்ளது. தனிமனிதன் வாழ்க்கைப் பண்புகளைச் சொல்வது அறத்துப்பால். சமுதாயத்தின் வாழ்க்கை பற்றிய பகுதிகளைச் சொல்வது பொருட்பால். ஒருவனும் ஒருத்தியும் பிறவி தோறும் வந்த தொடர்பினால் நயந்து, உள்ளமொன்றிக் காதல் செய்து வாழ்வதைச் சொல்வது, காமத்துப்பால். 1930 பாடல்களால் உலகத்தார் உள்ளுவன எல்லாம் ஓர்ந்து பாடியிருக்கிறார், தனிமனிதப் பண்பைச் சொல்லும் அறத்துப்பாலில் வருவதே கொல்லாமை யையும் பொய்யாமையையும் சொன்ன பாட்டு. இனி, சமுதாய வாழ்வைப்பற்றிச் சொல்லும் பொருட்பாலில் வரும் பாட்டு ஒன்றைப் பார்ப்போம்.

குரல் ஆ: சமுதாய வாழ்வு எப்போதும் ஒன்றாகவே இருப்பதில்லையே முடியரசு, குடியரசு என்று வெவ் வேறு வகையில் நாட்டின் ஆட்சி அமைகிறது; அதற்கு ஏற்றபடி சமுதாய வாழ்வு இருக்கிறது. திருவள்ளுவர் அமைக்கும் சமுதாயம் எத்தகையது?

குரல் அ: அரசனைச் சமுதாயத் தலைவனாகக் கொண்ட காலம் அவர் காலம். ஆகவே, அவர் முடியரசின்கீழ் வாழும் சமுதாயத்தையே எண்ணிச் சொல்கிறார். ஆயினும் முடியரசானாலும் குடியரசானாலும் ஆட்சி முறை யென்பது எப்போதும் இருக்கும் அல்லவா? அந்த ஆட்சி முறை பற்றி அவர்கூறிய கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொதுவாக இருக்கின்றன. ஒரு காட்சியைப் பார்க்கலாம். . - . . . . (மாற்றம்.)


வழிப்போக்கன்: இது என்ன? மனித நடமாட்டமே இல்லாத வழியாக இருக்கிறதே! நாமோ மடியில்