பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 17

கனத்தோடு இருக்கிறோம். கடவுளே! எப்படி நாம் இந்த இடத்தைக் கடந்து செல்லப் போகிறோமோ தெரியவில்லையே!

(காலடிகளின் ஓசை.)

வழிப்போக்கன் : யார் ஐயா நீங்கள்?

திருடன்: (முரட்டுக் குரல்) எங்களையா கேட்கிறீர்? உம்முடைய மடிக்கனத்தை இறக்கி நன்மை செய்ய வந்திருக்கிறோம். இங்கே பார் ஐயா! மடியில் இருப்பதைக் கீழே வைக்கிறீரா? இல்லை, இந்த வேலுக்கு இரையாகிறீரா? . . . உம். என்ன யோசிக் கிறீர்? எடுத்து வையும் ஐயா! இந்த வழியில் நான் தலைவன் என்பது உமக்குத் தெரியாதா?

வழிப்போக்கன் : கடவுளே !

திருடன் : கடவுள் உம்முடைய உதவிக்கு வரமாட்டார். எடுத்து வையும்.

(தனிமையைக் குறிக்கும் வாத்திய இசை.)

குரல் அ : இப்போது மற்றொரு காட்சியையும் கவனிக்கலாம். - -

(மாற்றம்.)

அமைச்சர் குரல் : மகாராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட வீரபூபதி பாண்டிய மன்னர் தங்களிடம் பணிந்து ஒரு கோடிப் பொன் இரந்து பெற்றுவரச் சொன் னார், வணிகர் பெருமானே ! -

தி.வி.-2