பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 19.

குரல் அ ; வேலொடு நின்ற வழிப்பறிக்காரன், மடி யில் இருப்பதைக் கீழே வை ஐயா என்றது போன் றதுதான், அதிகாரத்தோடு நிற்பவன் ஒரு குடி மகனை இரந்து கேட்பது என்பதை எவ்வளவு சுருக்கமாகச் சொல்கிருர் வள்ளுவர்! இது எல் லாக் காலத்துக்கும் பொருந்துவது அல்லவா? முன்னே அடிமைப்பட்ட இந்தியாவில் போர்க்கடன் என்று அரசியலார் செல்வர்களிடம் பொருள் திரட்டினர்கள். அதிகாரிகள் அவர்களிடம் சென்று கேட்டுக் கொண்டார்கள்; கொடுக்க வேண்டும் என்று பணிவாகச் சொன்னர்கள். ஆனால், அந்தப் பணிவு தோற்றத்தளவில்தான். அதிகாரத்தின் மற் ருேர் உருவந்தான் அது. ஆகவே, அதையும் இந்தக் குறளுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம் அல்லவா ? - - குரல் ஆ: நன்ருகச் சொல்லலாம். வரும் காலத் திலும் இந்தக் குறளுக்கு உதாரணமாகப் பல நிகழ்ச்சிகள் நிகழலாம்; எந்த நாட்டிலும் நிகழ

குரல் அ : ஆகவே இறையனர் சொன்னரே, அது

எவ்வளவு பொருத்தமானது என்பது இப்போது தெளிவாகும். . . வேறு குரல் : (பாடுகிறது.)

என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும் - நின்று அலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். -

மாற்றம்)