பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 திருக்குறள் விளக்கு குரல் குரல் அ :திருக்குறளின் மற்றப் பண்புகளையும் பார்க்க வேண்டாமா?

குரல் ஆ : அது கவிதைச் சுவை அமைந்தது என்று

சொன்னிர்களே, நீதி நூலல்லவா? குரல் அ : தேனே மருந்தாற்ைபோல நீதி நூலே கவிதை வடிவில் இருக்கிறது. அதன் கவிப் பண் பைப் பற்றி மதிப்புக்குரிய ஜி. யூ. போப் கூறுகிருர்.  : வேறு குரல் :குறள் இவ்வளவு சிறப்புற்றிருப்பதற்கு அதன் அற்புதமான கவிதை வடிவம் பெரிய காரண மாக இருக்கிறது. அந்த உருவத்தில் அமைந்த சொற்சுருக்கம் இந்தத் தமிழ்ப் பெருநாவலரின் திருவாக்குக்குத் தெய்வத் தன்மையைத் தருகிறது.” குரல் அ : எம். ஏரியல் என்ற பேரறிஞர் சொல்வதை மகாத்மா காந்தியடிகள் குறித்திருக்கிருர். அதை நாம் கேட்க வேண்டாமா ? - வேறு குரல் : குறள் தமிழ் இலக்கியத்திலே தலை சிறந்த படைப்பு. உயர்வும் தூய்மையும் உள்ள மனித சிந்தனையின் அற்புத வெளியீடு அது: குரல் அ. டாக்டர் கிரெளல் இரத்தினச் சுருக்கமாகச்

சொல்வது எத்தனை அழகாக இருக்கிறது! வேறு குரல் : அதனுல் உண்டாகும் இன்ப விளைவை எந்த மொழிபெயர்ப்பைக் கொண்டும் புலப்படுத்த

1. The Kural owes much of its popularity to its equisite poetic forma. The brevity renderedi necessary by the form gives an orâcular effect to the utterances of the great Tamil Master of sentences.

—Rev. G. U. Pope.

2.* The Kural is the master-piece of Tamil Literature—one of the highest and purest expressions of human thought. ~ M. Ariel.