பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 21

முடியாது. வெள்ளித் தாம்பாளத்தில் வைத்துத் தந்த பொற்கனி அது."

குரல் அ : அதன் சொல்லினிமையும் பொருள் இனிமையும் சுருக்கமான வடிவும் பாடல்களை நம் உள்ளத்தில் நன்றாகப் பதித்துக்கொள்ள உதவுகின்றன: நினைக்க நினைக்க இன்பத்தைத் தருகின்றன. அதனால்தான் மாங்குடி மருதனார் என்ற புலவர், உள்ளும்போதெல்லாம் உள்ளத்தை உருக்கும் என்று சொல்கிறார். அவர் திருவள்ளுவர் மாலையில் சொல்லியிருப்பது இது :

வேறு குரல் : (பாடுகிறது.) ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி

வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீதற்றோர்

உள்ளுதோ அள்ளுதோ துள்ளம் உருக்குமே

வள்ளுவன் வாய்மொழி மாண்பு.’

★ குரல் அ : திருவள்ளுவர் எப்படிக் கவிதைப் பண்பை ஏற்றியிருக்கிறார் என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம். நுட்பமான உணர்ச்சிகளைத் திட்ப மாக உருவாக்கிச் சொல்ல வல்லவன் கவிஞன்.

குரல் ஆ : அப்படியென்றால் விளங்கவில்லையே! சற்று விளக்குங்கள்.

குரல் அ : புள்ளிக்குப் பரிமாணம் இல்லை என்று ஜியோமிதி கூறுகிறது. ஆனாலும் அதை எப்படிக் காட்டுகிறார்கள் தெரியுமோ ?

1. No translation can convey an idea of its charming effect. It is truly apple of gold in a net-work of silver. —Dr. Grats

2. திருவள்ளுவ மாலை, 24.