பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 23 பெண்குரல் : என்ன, இன்னும் அக்காள் வர வில்லையே! இனியும் இந்த வீட்டில் நான் தங்கக் கூடாதே! இந்தப் பொருமைக்காரன் வீட்டில் இனி இருக்கவேண்டியவள் என் அருமை அக்காளல் லவா ?-ஆ, அதோ வந்துவிட்டாள்; வா அக்கா வா! நீ எப்படி வந்தாய் ?

(அழுகைபோன்ற ஒவி பின்னணியில்.) முதேவி : நான் புறக்கடை வழியாக வந்தேன். உன் வீடாக இருந்த இதை என் வீடாக்கப் போகிருயா ? திருமகளாகிய உன்னை வைத்துப் போற்றத் தெரிய வில்லையே இந்த மனிதனுக்கு சீதேவி: அது கிடக்கட்டும். இதோ இந்த ஆசனத் தில்தான் நான் இருந்தேன். எனக்கு இனி இங்கே வேலை இல்லை. சீதேவியாகிய நான் இருந்த காலத்தைப் பற்றி இவன் பின்னலே நினைப்பானே இல்லையோ, அதைப்பற்றிக் கவலை இல்லை. எனக்கு மூத்தவளாகிய நீ இங்கே சுகமாக இரு. எல்லா வகையிலும் உனக்கு ஏற்ற இடம் இது. முதேவி : நீயும் இங்கே இருக்கப்போகிருயா? சீதேவி : ந்ன்ருகச் சொன்னுய்! நீ வந்த பிறகு எனக்கு இங்கே என்ன வேலை? நீ இங்கே கவலை இல்லாமல் இரு நான் போய் வருகிறேன். -

(மாற்றம்.)

- ★ குரல் அ : சீதேவி மூதேவிக்கு அந்த இடத்தைக்

காட்டிவிட்டுப் போய்விடுகிருள். குரல் ஆ : பாவும்! அழுக்காறுடையவன் கதி அதோ

கதிதான். - . . . . .