பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 29 முதற் குரல் : ஆ! எத்தனை அழகாகச் சொல்லி

விட்டார்? வறுமையைப்போலக் கொடுமையானது எது என்ருல், வறுமையைப்போல வறுமையே கொடுமையானதாம். இரண்டாவது குரல் : உவமை சொல்லி மாளாது என்பதையல்லவா, நம் ஆவலைத்துண்டிச் சடுகுடுக் காட்டி அழுத்தமாகப் புலப்படுத்திவிட்டார்?)

(மாற்றம்.) குரல் அ: திருவள்ளுவர் வறுமையின் கொடுமையை, அது இன்னுதவற்றுள் தலைசிறந்தது என்பதை, அழகிய முறையில் தெளிவாக்குகிருர், உவமையே இல்லாத கொடியது அது என்று சொன்னுல் உப்புச்சப்பு இல்லாமல் இருக்கும். உவமையைக் கேட்பார் போன்று ஒரு கேள்வியை எழுப்புகிருர். இன்மையின் இன்னதது யாது என்ற அந்தக் கேள்வியைக் கேட்கும்போது, நர்ம் நம் அநுபவத் தில் வந்த கொடுமைகளை யெல்லாம் அடுக்கிப் பார்க்கிருேம். ஒன்றும் சரிப்படுவதில்லை. பிறகு அவரே சொல்லப்புகுவார் போல, ' இன்மையின் இன்னுதது யாது? எனின்' என்று தொடங்கி இன்மையின் என்று அதை நீட்டி, கடைசியில் அதற்கு அதுவே உவமை என்று சொல்லிவிடு கிருர் பாட்டை மறுமுறையும் கேட்போமா? வேறு குரல் : (பாடுகிறது)

இன்மையின் இன்னதது யாது,-எனின்,

. இன்மையின்இன்மையே இன்னதது. குரல் ஆ அழகான கவிதை! அற்புதமான உத்தி. இறையனர் சொன்னதுபோல இது நின்று