பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30 திருக்குறள் விளக்கு

அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதுதான். இன்னும் வள்ளுவர் ஆளும் கவிதை உத்திகளைக் கேட்க விரும்புகிறேன். -

(மாற்றம்.) ★

குரல் அ: கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்லி, கேட்பவரை உணர்ந்து கொள்ள வைப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. வைதாலும் குறிப்பாக வைதால் அதிலும் ஒரு நயம் தோன்றும் குறிப்பு நயத்தைச் சில இடங் களில் வள்ளுவர் ஆள்கிறார். -

குரல் ஆ: உதாரணம் சொல்லப் போகிறீர்கள் அல்லவா? - -

குரல் அ: ஆம், திருவள்ளுவர் ஒரு பாட்டில் மரம் ஏறுவதைப்பற்றிச் சொல்கிறார். -

குரல் ஆ: அது அறமா, பொருளா. இன்பமா?

குரல் அ: பொருட்பாலில்தான் சொல்லியிருக்கிறார், ஒரு கொம்பின் நுனிமட்டும் ஏறினவர் அதற்கு மேலும் தம்முடைய ஊக்கத்தைக் காட்டினால் அந்த முயற்சி உயிருக்கே அழிவாக வந்து முடியும் என்று சொல்கிறார்,

வேறு குரல்: (பாட்டு)

நுனிக்கொம்பர் ஏறினார் திறந்து ஊக்கின்

உயிர்க்கு இறுதி ஆகி விடும்.'

குரல் ஆ: இது எப்படிப் பொருட்பாலில் சேர்ந்தது? சமுதாயத்தைப்பற்றியதாக என்ன கருத்து இதில் இருக்கிறது? -

1. குறள், 476. * ..