பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


32 திருக்குறள் விளக்கு

பெண் குரல்-காதலி: இன்னும் அவர் வரவில்லையே! ஊருக்குப் போனவர் குறிப்பிட்ட காலத்தில் வராமல் இப்படித் துன்புறுத்துகிருரே !

. (தோழி வருகிருள்.) மற்ருெரு பெண் குரல்-தோழி: என்ன, ஒரு விதமாகச் சோர்வடைந்திருக்கிருயே! உடம்புக்கு ஏதாவது தீங்கு உண்டோ? காதலி: உடம்புக்கு ஒன்றும் இல்லை; உள்ளந்தான்

சரியாக இல்லை. தோழி : உள்ளத்தில் என்ன வேதனை? உன் கண்கள்

ஏன் இப்படிச் சிவந்து கலங்கி யிருக்கின்றன? காதலி: இரவு முழுவதும் தூக்கமே இல்லை. தோழி: ஏன் அப்படி? காதலி: அவர் ஊரில் இல்லை. போனவுடன் கடிதம்

போடுகிறேன் என்ருர், போடவில்லை. . தோழி: ஆண்பிள்ளை அவர் போன இடத்தில் என்ன வேலையோ? அதைக் கவனித்துக்கொண்டு தானே வரவேண்டும்? . காதலி. ஆலுைம் எனக்கு அவருடைய நினைவாகவே இருக்கிறது. அவருக்குக் காலையில் இளஞ்சூடாக வெந்நீரில் குளிக்க வேண்டும். சுடச்சுட உணவு வேண்டும். போகிற இடத்தில் என்ன வசதி இருக்கிறதோ தெரியவில்லை. இவற்றை எண்ணி எண்ணி, இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. தோழி: அவர் வருகிற வரைக்கும் இப்படித்தான்

இருக்குமோ? . .