பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 37

தோழி: இதுதானே நீ சொன்ன பூத சதுக்கம் ? மருதி ஆம்.-பூதப்பெருமானே! என்னைக் கண்ட ஒரு பாவியின் நெஞ்சிலே புகுமளவுக்கு நான் எளியவளாகிவிட்டேன். இனி நான் இல்லறம் செய்வதற்குரிய தகுதியை இழந்துவிட்டேன். நான் என்ன குற்றம் செய்தேனென்று எனக்கே தெரிய வில்லை. நீ என்னை என்ன செய்தாலும் சரி. பூதக் குரல் : (சிரிப்பு.) ஏ. பெண்ணே, 'தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் - பெய் யெனப் பெய்யும் மழை" என்ற பொய்யில் புலவ னுடைய பொருள் நிரம்பிய உபதேசத்தை நீ தெரிந்துகொள்ளவில்லையே! நீ வம்புக் கதைகளைக் கேட்டு; திருவிழாவைப் பார்ப்பதற்காகப் பல இடங் களுக்குப் போகிருய்; அங்கங்கே உள்ள தெய்வங் களைக் கும்பிடுகிருய். ஆதலால் உன் கற்பு, தலைமைக் கற்பாக இருக்கவில்லை. மழையை நீ பெய்யென்ருல் பெய்யாது. பிறர் நெஞ்சைச் சுடும் தன்மையும் உனக்கு இல்லை. - - மருதி: அப்படியானல் என்னைக் கொன்றுவிடு. s பூதம்: நீ ஏதும் மனத்தாலும் தீங்கு செய்யவில்லை யாதலால் உன்னை நான் தண்டிக்கமாட்டேன். போய் வா. இனியாவது அந்தப் பொய்யில் புலவன் பொருளுரையைத் தேறுவாயாக, r

- (மாற்றம்.)

★ -

1. குறள், 55.