பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38 திருக்குறள் விளக்கு

குரல் அ: இப்படி மணிமேகலை ஆசிரியர் ஒரு காட்சியை அமைக்கிறார். பூத சதுக்கத்துப் பூதம் சொல்வதைச் சாத்தனார் வாக்கினாலேயே கேட்க லாமே! -

வேறு குரல் : (பாடுகிறது.)

'யான் செய் குற்றம் யானறி கில்லேன் பொய்யின கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீ' எனச் சேயிழை அரற்றலும் மாபெரும் பூதம் தோன்றி மடக்கொடி நீகேள்'என்றே நேரிழைக்கு உரைக்கும்: தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்; பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுட் பேணல் கடவியை ஆகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது; நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடு உம் பெற்றியும் இல்லை,"

குரல் அ: மாதர் கற்பைப் பற்றித் திருவள்ளுவர் கூறிய அருமைத் திருக்குறளை மேற்கோளாக வைத்துத் தம்முடைய காவியத்தில் ஒரு காட்சியையே புனைந்து விட்டார். சாத்தனார். . . . . . . . . - (மாற்றம்.)

குரல் ஆ: மகளிர் ஒழுக்கத்தைப்பற்றிச் சொன்னதை உணர்ந்தோம். ஆடவர் ஒழுக்கத்தைப்பற்றி ஒன் றும் இல்லையா? .

1. மணிமேகலை, 22: 54-67. *