பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் விளக்கு 39 குரல் அ. நல்ல வேளையாக நினைப்பூட்டினிர்கள். சிறந்த கற்புடைப் பெண்ணின் இலக்கணத்தைச் சொன்ன திருவள்ளுவர், ஆடவர் ஒழுக்கத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிருர். அதை வைத்து மாணிக்கவாசக சுவாமிகள் ஒரு சிறந்த காட்சியைப் புனைந்திருக்கிருர். குரல் ஆ: சைவ சமயாசாரியர் நால்வர்களில் ஒருவ

ராகிய மாணிக்கவாசகரா ? - குரல் அ ஆம்; அவரே திருக்கோவையாரில் ஆண் ஒழுக்கச் சிறப்பைத் திருவள்ளுவர் எடுத்துக்காட்டிய குறளுக்கு இலக்கியம் போல ஒருபாடலைஅமைக்கிருர். குரல் ஆ : அப்படியா? எங்கே, அதைக் கேட்கலாம். குரல் அ , அதற்கு முன் சிறிது கதை சொல்ல வேண் டும். சொல்கிறேன். அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி, ஒரிளம் மைந்தனும் ஒரு பேரெழில் மங்கை யும் தனியே சந்தித்துக் காதல் கொள்கின்றனர். அவர்களைத் திருமணத்தால் ஒன்றுபடுத்தவேண்டு மென்று விரும்புகிருள், அந்தப் பெண்ணினுடைய தோழி. காதலியைப் பெற்ருேர் வேறு யாருக்கோ அவளைத் திருமணம் புரிவிப்பதாக எண்ணிக்கொண் டிருக்கிருர்கள். இனி, இங்கே இருந்தால் கற்புக்குப் பழுது வருமென்று எண்ணி, அந்தப் பெண் தன் காதலனுேடு யாரும் அறியாமல் புறப்பட்டுவிடுகிருள். குரல் ஆ: இது பெரிய காதற்கதையாக இருக்கும்

போல் இருக்கிறதே! - குரல் அ : கோவை என்ற பிரபந்தம் காதற்கதையைச் சொல்லும் நூல்தான். இந்தக் காட்சி திருக்கோவை யாரில் வருகின்றது என்றல்லவா சொன்னேன் ?