பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42 திருக்குறள் விளக்கு

குரல் அ: பிறன் மனையை நோக்காதது பேராண்மை. இதை உடையவன் அந்தக் காதலன். ஆதலின் எதிர்வந்த இருவரில் சிங்கம்போன்ற ஆடவனை மட்டும் கண்டான்; இளம் பெண்ணைக் காணவில்லை. கண்டால் அல்லவா சொல்ல முடியும் ? ஆனாலும் செவிலித் தாயை ஏமாற்றக்கூடாதல்லவா? அவன் காதலி ஆடவனைப் பாராமல் பெண்ணைப் பார்த் தவள். ஆதலால் அவளைச் சொல்லும்படி குறிப்பித் தான். இந்த அற்புதக் காட்சியைச் சொல்லும் மாணிக்கவாசகர் பாடலைக் கேட்கலாம்.

பெண்குரல் : (பாடுகிறது)

மீண்டார் எனஉவந்தேன் கண்டு நும்மை மீண்டார் எனஉவந்தேன்கண்டு நும்மை; இம்மேதகவே பூண்டார் இருவர் இம்மேதகவே பூண்டார் இருவர்முன் போயினரோ ?

ஆண்குரல் : (பாட்டு)

      புலியூர் எனை நின்று

ஆண்டான் அருவரை ஆளியன்னைக் கண்டேன்.

அயலே- - -

தூண்டா விளக்கு அனையாய் !

என்னையோ அன்ன சொல்லியதே ? என்னையோ அன்னே சொல்லியதே! 1

குரல் ஆ: என்னே ஒழுக்கச் சிறப்பு ! அந்தச் செவிலியை அன்னையென்று குறிக்கிறான் ; பார்த் தால் தாயாகப் பார்க்கிறவன் என்று தெரிகிறது.

1. திருக்கோவையார், 244,